உலகக்கோப்பை தொடரில் 4ஆவது 6ஆவது இடத்தில் கட்டாயம் இவர்களே களமிறங்குவார்கள் – ரவி சாஸ்திரி

ravi

இந்திய கடைசியாக நடந்து முடிந்த நியூசிலாந்து தொடரை (4-1) என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியது . இதனால் இந்திய அணியை பலரும் வாழ்த்திய படி உள்ளனர். இந்திய அணி தற்போது முழு பலத்துடன் திகழ்கிறது.

rohith dhawan

தற்போது உலகக்கோப்பை தொடரின் இந்திய அணி குறித்து பலரும் பல கருத்துக்களை கூறிவருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

அதில் ரவி சாஸ்திரி கூறியதாவது : இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக உலகக்கோப்பை தொடரிலும் ரோஹித் மற்றும் தவான் தொடர்வார்கள். மேலும், கோலி 3 வைத்து இடத்திலும், 4ஆவது இடத்தில அம்பதி ராயுடுவும், 5ஆவது இடத்தில் தோனி மற்றும் 6ஆவது இடத்தில் ஜாதவ் ஆகியோரே கட்டாயம் அணியில் விளையாடுவார்கள் என்று ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

தொடர்ச்சியாக நல்ல ஆட்டத்தினை வெளிப்படுத்திவரும் இந்திய அணி உலகக்கோப்பை தொடரிலும் சிறப்பாக ஆட்டத்தினை வெளிப்படுத்தி கோப்பையை கைப்பற்றும் என்பது என்னுடைய நம்பிக்கை மற்றும் இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதுவே என்று ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

தோனியை டி20 அணியில் இருந்து நீக்க முடியாது. அவர் இந்த வரிசையில் களமிறங்குவார் – சுனில் கவாஸ்கர்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்