தோனியை டி20 அணியில் இருந்து நீக்க முடியாது. அவர் இந்த வரிசையில் களமிறங்குவார் – சுனில் கவாஸ்கர்

gavaskar

இந்திய கடைசியாக நடந்து முடிந்த நியூசிலாந்து தொடரை (4-1) என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியது . இதனால் இந்திய அணியை பலரும் வாழ்த்திய படி உள்ளனர். இந்திய அணி தற்போது முழு பலத்துடன் திகழ்கிறது.

hitman

நாளை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் துவங்க உள்ளது. இந்நிலையில், இந்திய அணி வீரர்களின் பேட்டிங் வரிசை குறித்து முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் கவாஸ்கர் கூறியதாவது : தோனியை அணியில் இருந்து நீக்க முடியாது. அவர் இப்போது நல்ல பார்ம்மில் உள்ளார். மேலும், அவர் பலமாக அடிக்கும் வீரர் ஆவார் மேலும், அவரின் கீப்பிங் டெக்னிக் நாம் அனைவரும் அறிந்ததே. அவரிடம் இருந்து வளர்ந்து வரும் வீரர்கள் கற்றுக்கொள்ள நிறைய விடயம் இருக்கிறது.

gavaskar

அவர் 6வது இடத்தில இறங்கி இந்திய அணியில் ஆடுவார். அவரால், வெற்றிகரமான பினிஷிங் கொடுக்க முடியும். மேலும், பண்ட் மற்றும் கார்த்திக்கு இந்த தொடர் முக்கியமான ஒன்றாகும் என்றும் கவாஸ்கர் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

உலகக்கோப்பை தொடரில் கீப்பராக தோனி, பேட்ஸ்மேனாக பண்ட் இடம் பிடிக்க நடவடிக்கை எடுப்பேன்- தேர்வுக்குழு தலைவர்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்