உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி 3ஆம் இடத்தில் ஆட மாட்டார். அவருக்கு பதிலாக இவரே 3ஆம் இடத்தில் இறங்குவார் – ரவி சாஸ்திரி

Ravi

2019ஆம் அடுக்காக உலகக்கோப்பை தொடர் வரும் மே மாதம் இறுதியில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியே கோப்பையை கைப்பற்றும் என்று பல்வேறு கிரிக்கெட் வீரர்களும், விமர்சகர்களும் மற்றும் ரசிகர்களும் கூறிவருகின்றனர்.

rohit-koli

இந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அளித்த பேட்டி ஒன்றில் உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி 3ஆம் இடத்தில் இறங்க மாட்டார். அவருக்கு பதிலாக அவரது இடத்தில் இந்திய அணியின் அம்பத்தி ராயுடு விளையாடுவார் என்று தெரிவித்தார்.

அதன் காரணம் : இங்கிலாந்து போன்ற பந்துவீச்சாளருக்கு உதவும் மைதானங்களில் டாப் 3 வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தால் நடுவரிசையில் ஆடுவது என்பது அவ்வளவு எளிதல்ல. அதனால், ராயுடுவை முன்னால் ஆடவைக்க முடிவு செய்துள்ளோம்.

Rayudu

கோலி எந்த இடத்தில் ஆடினாலும் அணியை சரியான பாதைக்கு அழைத்து செல்வார். எனவே, இந்த உலகக்கோப்பை தொடரில் மட்டும் கோலி 4ஆம் இடத்தில் களமிறங்குவார். இதனால் நடுவரிசை பலப்படும் மேலும் அனைத்து வீரர்களும் அவர்களது பங்களிப்பை அளிப்பதற்கு சரியான வாய்ப்பாக அது அமையும் என்று ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

வெலிங்டனில் நடந்த முதலாவது டி20 போட்டி மூலம் மோசமான சாதனை ஒன்றிற்கு ஆளான தோனி – ஏன் இப்படி நடக்குது

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்