ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தல தோனி தொடர்ந்து மூன்று அரைசதம் விளாச இதுவே காரணம் – செம மேட்டர்

dhoni

இந்திய அணியின் முன்னணி வீரரும் அதிரடி ஆட்டக்காரருமான தோனி கடந்த 2018ஆம் ஆண்டு அவரது கிரிக்கெட் வாழ்வில் மிக மோசமான ஆண்டாக அமைந்தது. 2018ஆம் ஆண்டு 13 ஒருநாள் போட்டிகளில் கலந்து கொண்ட தோனி ஒரு அரைசதம் கூட அடிக்கமுடியாமல் 275 ரன்கள் மட்டுமே அடித்தார்.

dhoni

இந்த மோசமான ஆட்டத்தினால் அவரது ஆட்டம் பலரால் பலவகையில் விமர்சிக்கப்பட்டது. ஆனால், அவை அனைத்திற்கும் பதில் அளிக்கும் விதமாக இந்த 2019ஆம் ஆண்டு துவக்கத்தில் நடந்த ஆஸ்திரேலிய அன்னிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர்ந்து மூன்று அரைசதம் அடித்து இந்திய அணி தொடரை கைப்பற்ற முக்கிய காரணமாக அமைந்ததோடு தொடர்நாயகன் விருதினையும் பெற்றார்.

அந்த தொடரில் தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காரணம் இதுதான் என்று தோனியின் பேட் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பாளர் கூறியதாவது : வழக்கமாக சரியான அளவிலான கனமான பேட்டை மட்டுமே தோனி பயன்படுத்திவந்தார். ஆனால் தற்போது வேகப்பந்துவீச்சு மற்றும் ஸ்லோவான ஆடுகளம் என ஆடுகளத்தின் வேகத்திற்கு ஏற்ப கனமான பேட்டை அவர் உபயோகிக்கிறார்.

dhoni karthick

மேலும் தற்போது அவர் பயன்படுத்தும் பேட்டின் அடிப்பகுதியை நீங்கள் கவனித்திருந்தீர்கள் என்றால் பேட்டின் பின்பகுதி பெரியதாக இருக்கும் அதனால் அவரால் பெரிய அளவில் பலத்தினை கொடுத்து பெரிய ஷாட் அடிக்க முடியும். பொதுவாக இவ்வளவு கனமான பேட் யாரும் விரும்ப மாட்டார்கள் ஆனால், தோனி அதை விரும்பி ஆடுகிறார் அதனால் இப்போது அவரால் முன்பு போல நன்றாக ஆடமுடிகிறது என்று தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

சேவாக்கின் பேபி சிட்டர் விளம்பரத்தை பார்த்த ரிஷப் பண்ட். சேவாக்கிடம் கூறியது என்ன தெரியுமா? அடப்போங்க வீரு பாஜி

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்