சேவாக்கின் பேபி சிட்டர் விளம்பரத்தை பார்த்த ரிஷப் பண்ட். சேவாக்கிடம் கூறியது என்ன தெரியுமா? அடப்போங்க வீரு பாஜி

Viru

தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின் இந்திய அணிக்கு நிரந்தர விக்கெட் இல்லாமல் தவித்து வந்தது. அந்த குறையை நீக்கி நம்பிக்கை கொடுத்தவர் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். இவரது பேட்டிங் ஸ்டைல் பார்ப்பதற்கு அலாதியான ஒன்றாகும். அந்த அளவிற்கு அதிரடியாக ஆடும் வீரராவார்.

pant

கடந்த ஆஸ்திரேலிய தொடரின் போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் பண்டை “பேபி சிட்டர்” என்று வசை பாடினார். அதற்கு பதிலளிக்கும் வகையில் அடுத்த போட்டியில் பண்ட் சத்தம் விளாசியது மட்டுமின்றி தற்காலிக கேப்டன் என்று ஆஸ்திரேலிய கேப்டன் பெயினை நேருக்கு நேர் எதிர்த்தார். அவரின் தைரியம் அனைவராலும் பாராட்டப்பட்டது.

இதனை தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலிய அணி இந்திய வந்து கிரிக்கெட் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விளம்பரத்தில் சேவாக் பேபி சிட்டராக நடித்துள்ளார். இந்த விளம்பரம் இப்பொது இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதனை கண்ட ரிஷப் பண்ட் சேவாக்-க்கு ட்வீட் ஒன்றை செய்துள்ளார். இதோ அந்த ட்வீட் :

இந்த டீவீட்டில் நான் இன்று ஒரு சிறந்த ஆட்டக்காரராகவும் மட்டுமின்றி பேபி சீட்டராக இருக்கவும் நீங்கள் தான் எனக்கு வழிகாட்டியாக இருக்கிறீர்கள் என்று நகைச்சுவையாக ட்வீட் செய்துள்ளார் பண்ட்.

இதையும் படிக்கலாமே :

மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இனி நான் பேசப்போவதில்லை. நான் வீசும் பந்துகள் பேசும் – இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்