பெண்கள் தலையில் பூ சுடுவதற்கு பின் ஒளிந்துள்ள மிகப்பெரிய அறிவியல் உண்மை

flower
- Advertisement -

தமிழக பெண்கள் பொதுவாக பூக்களை தலையில் சூடுவது வழக்கம். இது நமது கலாச்சாரத்தில் தொன்று தொட்டு வரும் ஒரு வழக்கம். நம் முன்னோர்களில் ஒவ்வொரு செயலிற்கு பின்பும் பல அறிவியல் உண்மைகள் ஒளிந்திருப்பது போல் பெண்களை பூச்சூட சொன்னதற்கு பின்பும் அறிவியல் ஒளிந்துள்ளது.

flower

உலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கு மேல் பூ வகைகள் உள்ளன. ஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன. அதிலும் 500 கோடி பூக்களே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான பூக்கள் மணமூட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

- Advertisement -

பூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள்: பூக்களில் உள்ள பிராண ஆற்றல், மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது. இந்தப் பிராண ஆற்றலானது மனஅழுத்தத்தைக் குறைத்து, மனஅமைதிக்கு உதவுகிறது.

fllower

தலையில் பூ வைப்பது, மனமாற்றத்துக்கு உதவுகிறது. ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் தன்மையைக் கொடுக்கிறது. அதோடு மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.

- Advertisement -

நம்மைச் சுற்றியுள்ளவற்றைக் கவனிக்கும் சக்தியை (observation) அதிகரிக்கச்செய்கிறது.

பூக்களைச் சூடும் முறை:

- Advertisement -

பொதுவாகவே வாசனை அதிகம் உள்ள பூக்களை வாசனை இல்லாத பூக்களோடு சேர்த்தோ அல்லது சேர்த்து கோத்தோ சூடுவதை தவிர்க்க வேண்டும். அத்தகைய செயல்கள் பெண்களின் கூந்தல் வளர்ச்சிக்கு ஒரு தடையாக இருக்கும்.

fllower

ஜாதி மல்லிபூ என்பது பெண்கள் பலர் விரும்பக்கூடிய ஒன்றாகும். இத்தகைய ஜாதி மல்லியை வேறு சில பூக்களுடன் சேர்த்து சூட்டலாம். உதாரணமாக மகிழம்பூ, செவ்வந்திப்பூ, ரோஜாப்பூ, செண்பகப்பூ, கனகாம்பரம் இப்படியான பூக்களோடு சேர்த்து தலையில் வைத்துக்கொள்ளலாம்.

சில பூக்களை கற்பூரத்துடன் சேர்த்து வைத்துக்கொண்டால் வாசனை அதிகரிக்கும். உதாரணமாக செவ்வரளி, மந்தாரை, கருங்குவளை போன்ற பூக்களின் வாசனையை அதிகரிக்க இப்படி செய்யலாம்.

பெண்கள் குளிப்பதற்கு முன்பு மல்லிகைப்பூவை சூடுவதுதான் சாலச்சிறந்தது. அதே போல குளித்து முடித்த பின்பு வில்வப்பூ, முல்லை போன்றவற்றை சூடலாம். குளியலுக்காக எண்ணெய் தேய்க்கும் சமயத்தில் தாழம்பூவை சூட்டலாம்.

நம் தலையில் சூடிக்கொள்ளும் பூவானது தலையில் மட்டும் தான் இருக்க வேண்டும். தோள்பட்டையிலும் முதுகுப் பகுதியிலும் படாமல் இருப்பது நல்லது.

குளிர்காலங்களில் உஷ்ணமான பூக்களையும், உஷ்ணமான காலத்தில் குளிர்ச்சியான பூக்களையும் சூடுவது நல்லது.

தலையில் சூடும் பூக்களில் இருக்கும் பயன்கள்

1. ரோஜாப்பூ, தலைசுற்றுதல், கண்நோய் போன்ற பிரச்சனைகளை தீர்க்கிறது.

2. மல்லிகைப் பூ வானது கண்களுக்கு குளிர்ச்சி தந்து மனதை அமைதியாக வைக்கிறது.

3. செண்பகப்பூ வாதத்தை குணப்படுத்தி, பார்வைத்திறனை அதிகப்படுத்துகிறது.

4. பாதிரிப்பூ காது கோளாறுகளை சரி செய்கிறது. செரிமான சக்தியை அதிகப்படுத்துகிறது. காய்ச்சல், கண் எரிச்சல் போன்ற்றை வராமல் தடுக்கிறது.

5. செம்பருத்திப்பூ உடல் உஷ்ணத்தைத் தணித்து, தலைமுடி பிரச்சனைகளை சரிசெய்கிறது.

6. மகிழம்பூ பல்வலி, பல்சொத்தை போன்ற பல் குறைபாடுகளை தீர்க்கிறது.

7. வில்வப் பூ சுவாசப் பிரச்சனைகளுக்கு நிவாரணமாக இருக்கிறது. காச நோயை குணப்படுத்துகிறது.

8. சித்தகத்தி பூவானது தலைவலியைக் குறைத்து, நம் மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது.

9. தாழம்பூ நல்ல நறுமணம் தருவதோடு, நமக்கு நல்ல தூக்கத்தையும் தரும். உடல் சோர்வை நீக்கி சுறுசுறுப்பை அளிக்கிறது.

 thazhampoo

10. தாமரை பூவானது மன அழுத்தத்தை நீக்கி, மன அமைதி தந்து, நிம்மதியான தூக்கத்தையும் தருகிறது.

இதையெல்லாம் தாண்டி பெண்கள் என்றால் அழகு. பூக்கள் என்றாலும் அழகு. அழகுக்கு அழகு சேர்ப்பதற்காக கூட இந்தப் பழக்கம் வந்து இருக்கலாம்..

- Advertisement -