மொய் வைக்கையில் ஒரு ரூபாய் சேர்த்து வைப்பது ஏன் தெரியுமா?

0
5618
money
- விளம்பரம் -

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் விஷேசம் என்றால் அவர்களுக்கு மொய் வைப்பது தமிழர்கள் கலாச்சாரத்தில் ஊறிய ஒன்று. நாம் எவ்வளவு பெரிய தொகையை மொய்யாக வைத்தாலும் அதோடு ஒரு ரூபாய் நாணயத்தையும் சேர்த்து கொடுப்பது வழக்கம். ஏன் இப்படி செய்கிறோம் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

Moi

இன்று போல் அல்லாமல் பழங்காலத்தில் பணம் என்பது வெள்ளி, தங்கம் போன்றவற்றில் செய்யப்பட்ட நாணயங்களாகவே இருந்தது. ஒரு வராகன் பொன் என்பது 32 குண்டுமணி எடை கொண்டதாக இருந்தது. 32 என்ற எண் 32 வகையான தர்மத்தை குறிப்பதாக அமைந்தது.

Advertisement

தர்மத்தை குறிக்கும் இந்த நாணயத்தை நான் தர்மம் தவறாமல் சம்பாதித்தேன் அதையே உங்களுக்கு நான் மொய்யாக வைக்கிறேன். நீங்களும் இதை தர்ம நெறி தவறாமல் செலவிடுங்கள் என்பதை குறிக்கவே அந்த காலத்தில் நாணயத்தை மொய்யாக வைத்தனர். இதன் மூலம் மொய் வைப்பவர்களுக்கும் மொய்யை பெறுபவர்களுக்கு ஒரு மனநிறைவு இருந்தது.

silver coin

காலப்போக்கில் நாணயங்கள் படிப்படியாக குறைய ஆரமித்து ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் வர ஆரமித்தது. அந்த சமயத்தில் மொய் வைக்கையில் என்ன தான் பெரிய தொகையை மொய்யாக வைத்தாலும் அதில் மன நிறைவு ஏற்படாமல் இருந்து வந்தது.

moi

இதையும் படிக்கலாமே:
இவருக்கு தட்சணையாக பணம் கொடுத்தால் பத்து மடங்கு திரும்ப கிடைக்குமாம்

மனக்குறையை போக்க ஒரு வெள்ளி நாணயத்தை மொய் பணத்தோடு சேர்ந்து கொடுக்கும் பழக்கம் பின் வந்தது. காலம் மாற மாற இந்த வெள்ளி நாணயம் மறைந்து மொய் பணத்தோடு சேர்த்து ஒரு ரூபாய் நாணயத்தை கொடுக்கும் பழக்கம் வந்தது. இதுவே இன்று நடைமுறையில் உள்ளது.

Advertisement