இவருக்கு தட்சணையாக பணம் கொடுத்தால் பத்து மடங்கு திரும்ப கிடைக்குமாம்

money-1

சாய்பாபா இந்த பூவுலகில் இருந்த காலத்தில் அவர் ஷிரடியில் பல காலம் தங்கி இருந்தார் என்பது நாம் அறிந்ததே. அவர் அப்படி தங்கி இருந்த காலத்தில் பாபாவை சந்தித்து அவரின் அருள் பெற பலர் வருவது வழக்கம். அப்படி வருபவர்களிடம் அவரவர் சக்திக்கு ஏற்றவாறு அவர்களிடம் பாபா காணிக்கை வாங்குவது வழக்கம்.

Sai baba

துறவியான சாய் பாபா ஏன் இப்படி மக்களிடம் காணிக்கை வாங்குகிறார். இந்த பணத்தை வைத்து அவர் அப்படி என்ன தான் செய்ய போகிறார் என்ற சந்தேகம் அப்போது பலருக்கும் இருந்தது. ஆனால் அவர் பெற்ற பணத்தை ஒருநாளும் தனக்காக சேர்த்துவைத்தது கிடையாது. ஏதோ ஒரு இறைபனிக்காக அவர் அந்த காசை செலவிட்டுக்கொண்டே இருந்தார்.

ஒருகட்டத்தில் பாபாவை சந்திக்க வேண்டுமானால் நிச்சயம் குரு தட்சணை வைத்தே ஆகவேண்டும் என்றொரு நிலைகூட வந்தது. இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. சில நேரங்களில் சிலரிடம் பாபா தட்சணையை மறுக்கவும் செய்தார். கர்வத்தோடு வரும் பணக்காரர்களிடம் அவர்கள் கொண்டு வரும் அனைத்து பணங்களையும் தட்சணையாக பெற்று அவர்களின் கர்வத்தை அழிக்கவும் செய்தார். இப்படி பாபா, தன்னுடைய பக்தர்களிடம் பணம் பெற்றதற்கு பின் பல ரகசியங்கள் ஒளிந்திருந்தது.

Sai baba

ஒருமுறை மிகவும் கஷ்டத்தோடு வந்த ஒரு பெண்மணியிடம் பாபா ஆறு ருபாய் தட்சணை பெற்றார். இதன் மூலம் அந்த பெண்ணிடம் இருந்த பொறாமை, சூது, காமம் போன்ற ஆறுவிதமான தீய குணங்களை ஒழித்தார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சில ஏழைகளிடம் அவர் கட்டாயமாக தட்சணை வைத்தே ஆகவேண்டும் என்று கூறியதும் உண்டு. ஆனால் சில நாட்களுக்கு பின் அவர்கள் வாழ்வில் பல அற்புதங்கள் நடந்ததை அவர்கள் உணர ஆரமித்தனர். இதற்கு காரணம் பாபா, அவர்களின் கிரக தோஷத்தை போக்கினார் அதனால் அவர்களின் வாழ்வில் நன்மைகள் நடந்தது என்று நம்பப்படுகிறது.

Shirdi Sai Baba

ஒரு முறை கணபதிராவ் என்ற புகழ் பெற்ற மராத்தி நடிகர் ஒருவர் பாபாவிடம் சென்றார். பாபா அவரிடம் இருந்த அனைத்து பணத்தையும் தட்சணையாக பெற்றுக்கொண்டு அவரை அனுப்பினார். ஆனால் சில நாட்களிலேயே அவருக்கு அந்த பணம் பத்து மடங்காக திரும்ப கிடைத்தது என்று அந்த நடிகர் தன் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் பாபா தன் பக்தர்களிடம் இருந்து பெற்ற மொத்த தொகை 100 ரூபாயை தாண்டாது. அன்று இரவு அந்த பணத்தை அவர் நல்ல காரியங்களுக்காக பகிர்ந்தளிப்பார். அப்படி பகிர்ந்தளிக்கயில் அவரிடம் 300 ரூபாய் இருக்கும். 100 ரூபாய் எப்படி 300 ரூபாயாக மாறியது என்ற ரகசியத்தை இதுவரை யாரும் அறியவில்லை.

இதையும் படிக்கலாமே:
நட்சத்திரங்களுக்கான பொதுவான குணங்கள்

இன்றளவும் சாய் பாபா கோவிலில் உள்ள உண்டியலில் நாம் ஒரு ரூபாய் போட்டால் அது நமக்கு 10 ரூபாயாக திரும்பி வரும் என்ற நம்பிக்கை சாய் பக்தர்களிடம் உள்ளது.

இது போன்ற மேலும் பல சாய் பாபாவின் அற்புதங்கள் மற்றும் சாய் பாபா கதைகள் பல படிக்க தெய்வீகம் மொபைல் App ஐ டவுன்லோட் செய்யுங்கள்