முதல் இரு போட்டிகளில் நியூசிலாந்து அணியின் தோல்விக்கு காரணம் இதுதான் – நியூஸி பயிற்சியாளர்

- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் அணி இந்த தொடரில் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து அணியின் பயிற்சியாளரான கேரி ஸ்டெட் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

- Advertisement -

இந்த தொடரின் முதல் இரு போட்டிகளையும் தோல்வி அடைந்து நியூசிலாந்து அணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தினை அளித்துள்ளது. இந்த போட்டிகளின் தோல்விக்கு முக்கிய காரணம் எங்களது அணியின் பேட்ஸ்மேன்களே. எந்த ஒரு வீரரும் 50+ ரன்களை அடிக்க முடியவில்லை மேலும், பெரிய பாட்னர்ஷிப் எங்களிடம் இருந்து வெளிவராததால் ரன்களை அடிக்க முடியவில்லை. இதுவே தோல்விக்கு மிக முக்கிய காரணமாகும்.

boult

மேலும், அடுத்த போட்டியில் இந்த குறைகளை கலைந்து நியூசிலாந்து அணி வெற்றிபெறும். எங்களது அணி பேட்டிங் பயிற்சிகளை தீவிரமாக எடுத்துவருகின்றனர். எனவே, அடுத்த போட்டியில் எங்களது பேட்ஸ்மேன்கள் தங்களது பொறுப்பினை உணர்ந்து ஆடி அணிக்கு வெற்றியை பெற்றுத்தருவார்கள் என்று நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் தெரிவித்தார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

தோனியே என்னை முழுமையான கிரிக்கெட்டராக மாற்றினார் – இந்திய அணி நட்சத்திர வீரர்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -