விராட் கோலியின் ஜெர்ஸி நம்பர் 18-க்கு பின் மறைந்திருக்கும் சோகம் என்ன என்று தெரியுமா – நெகிழவைக்கும் பதிவு

virat
- Advertisement -

இந்திய அணியின் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிக்கும் கேப்டனாக செயல்படுபவர் விராட் கோலி. 2018ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி சிறந்த வீரருக்கான மூன்று விருதுகளையும் பெற்ற ஒரே வீரர் விராட் கோலி. இவர் படைத்த சாதனைகள் ஏராளம்.

kohli

சாதனைகள் பல இருந்தாலும் அவரின் ஜெர்ஸி நம்பர் 18 க்கு பின் மறைந்திருக்கும் சோகமே அவரின் இந்த வெற்றிக்கு தூண்டுதல் என்றால் அது மிகையல்ல. நம்பர் 18 க்கான கரணம் இதோ : விராட் கோலி 1988ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தவர். இவரது தந்தை பிரேம் கோலி, தாயார் சரோஜ் கோலி இளம் வயது முதல் கோலிக்கு கிரிக்கெட் மீது கொண்டிருந்த ஈடுபாடு காரணமாக அவரது தந்தை அவரை கிரிக்கெட் பயிற்சி அகாடெமி ஒன்றில் சேர்த்தார்.

- Advertisement -

அதன்பிறகு நன்றாக விளையாட ஆரம்பித்த விராட் கோலி அவரது திறமை காரணமாக 19 வயதுக்கு உட்பட்டோர் அணியின் கேப்டனாக விளையாடி கோப்பையும் கைப்பற்றினார். விராட் கோலிக்கு 18 வயது இருக்கும் போது அவரது தந்தை இறந்தார். அவரது தந்தை இறந்த அன்று நடைபெற்ற ரஞ்சி போட்டியில் விளையாடிய பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார் கோலி.

koli

மேலும், அவரது தந்தை விராட் கோலியின் 18 வயதில் அவரை விட்டு பிரிந்தாலும், டிசம்பர் 18 ஆம் தேதி இறந்தாலும் அந்த நாளை மறக்க கூடாது என்பதற்காக அந்த துக்க நாளை தனது அடையாளமாக மாற்றி தனது முதுகில் வைத்து இன்றுவரை வெற்றிகரமான ஒரு வீரராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நமது இந்திய அணியின் கிங். உண்மையில் நீங்கள் கிங் தான் கிங் கோலி சல்யூட்

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கடுமையாக மோதும். ஆனால், இந்த அணியே கோப்பையை கைப்பற்றும் – ஷேன் வார்னே

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -