உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கடுமையாக மோதும். ஆனால், இந்த அணியே கோப்பையை கைப்பற்றும் – ஷேன் வார்னே

warne

2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் வரும் மே மாதம் இறுதியில் துவங்க உள்ளது. இந்த தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த கோப்பையை கைப்பற்றுவதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.

worldcup

இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே தனது கருத்தினை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஷேன் வார்னே பதிவிட்டதாவது :

வரும் உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கடுமையாக மோதும் என்பது உண்மைதான். ஆனாலும், தற்போது உள்ள ஆஸ்திரேலிய அணி வலுவாக உள்ளதாகவே நான் கருதுகிறேன். அதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் தேர்வு சரியாக அமைய வேண்டும்.

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து மண்ணில் கொஞ்சம் எளிதாக விளையாடும் ஊர் அணி மேலும்,அங்குள்ள சீதோஷண நிலைகள் எங்கள் அணி வீரர்களுக்கு ஏற்றதாக இருக்கும். ஆகையால், 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பையை கைப்பற்றியது போன்று இந்த தொடரையும் நிச்சயம் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றி வரலாறு படைக்கும் என்று பதிவிட்டுள்ளார் ஷேன் வார்னே.

இதையும் படிக்கலாமே :

உலகக்கோப்பை தொடரின் முடிவில் எனது பயிற்சியாளர் பொறுப்பு முடிகிறது. அடுத்து இதைத்தான் செய்ய போகிறேன் – ரவி சாஸ்திரி

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்