நம்மை அறியாமலே நம் கண்கள் துடிக்க காரணம் இதுதான். அறிவியல் மற்றும் ஆன்மிகம் குறிப்பு இதோ

Eye-1

நம் கண்கள் மற்றும் புருவம் துடிப்பதற்கான காரணம் என்னவென்று நாம் இதுவரை சிந்தித்து கூட பார்த்ததில்லை. அது எதற்காக துடிக்கின்றது என்று நாம் அறியாத பல தகவல்களை இப்பதிவில் காணலாம்.

eye

இந்த காலகட்டத்தில் நாம் கண்களுக்கு அதிக வேலைகளை தருகின்றோம் தொலைபேசியும், காணொளிகளையும் எந்நேரமும் பார்த்துக் கொண்டே இருப்பதால் அறிவியல் ரீதியாக கண் துடிக்கிறது என்று கூறப்படுகிறது. இதனால் நமக்கு பல்வேறு பிரச்சனைகள் உண்டாகின்றது. அதில் முதல் பிரச்சனையாக கண்ணிலுள்ள நீர்த்தன்மை வரண்டு போகின்றது. அன்றாட வாழ்வில் நம் கண்களுக்கு நாம் மிகவும் அழுத்தம் தருவதால் இந்த பிரச்சனையெல்லாம் உண்டாகின்றது. முதலில் நம் கண்களுக்கு ஓய்வு என்பது அவசியமான ஒன்றாகும் ஏனென்றால், நாம் களைப்படையச் செய்ய கண்களும் ஒரு காரணமாக அமைகின்றது சிலரது கண்களை பார்த்தாலே அவர்கள் களைப்படைந்து விட்டார்கள் என்று நாம் எளிதில் சொல்லிவிடலாம்.

நம் உடலில் கண்கள் அவசியமான ஒன்றாகும். இதனை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் நாம் வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் நாம் வேலை செய்து விட்டு மீதி நேரங்களில் கண்களுக்கு ஓய்வு தர வேண்டும் எப்படி என்றால் சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டும் அல்லது இந்த வெள்ளரிப்பிஞ்சை கண்களை வைத்து சிறிது நேரம் உறங்க வேண்டும். இதனால் நம் கண்களுக்கு எந்த பிரச்சினையும் வராது.

kan parvai sariyaaga

கண்கள் துடிப்பதற்கு ஆன்மீக ரீதியாக சில விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. ஆன்மீக ரீதியாக வலது புருவம் துடித்தால் பணவரவு, ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி. இடது புருவம் துடித்தால் கவலை, மத்தியில் துடித்தால் நமக்குப் பிரியமானவர்களை நாம் சந்திப்போம். கண்ணின் நடுப்பாகம் துடித்தாள் கணவன் மனைவிக்கிடையே பல குழப்பங்கள் உண்டாகும் பெண்களுக்கு வலது கண் துடித்தால் நினைத்தது நடக்கும் இடது கண் துடித்தால் ஏதாவது, சோகச் செய்தி வரும் என ஆன்மீக ரீதியாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே:
வாழ்க்கையில் ஒருமுறையாவது நீங்கள் இந்த கோவிலுக்கு சென்றால் உங்கள் தலையெழுத்தே மாறிவிடும்!!

English Overview;
Here we have reason of eye ticking in tamil. We have eye ticking too.