இரவு நேரத்தில் விரைவாக ஜீரணம் ஆக இந்த கோதுமைமாவு அடையை இப்படி சுவையாக செய்து சாப்பிடுங்கள். இதன் ருசிக்கு இரண்டிற்கு நான்காக சாப்பிடுவீர்கள்

adai
- Advertisement -

அனைவரது வீட்டிலும் காலை, மாலை உணவு என்றாலே அது தோசை, இட்லியாக தான் இருக்கிறது. ஒரு சில நேரங்களில் அரைத்து வைத்த இட்லி மாவு தீர்ந்து விட்டது என்றால் என்ன செய்ய வேண்டும் என்ற யோசனை வந்து விடும். அதற்கு வீட்டில் இருக்கும் கோதுமை மாவை வைத்து தோசை செய்து சாப்பிடலாம் என்றும் தோன்றும். ஆனால் கோதுமை மாவை இப்படி வெறும் தோசையாக செய்து கொடுக்காமல், அதனுடன் தக்காளி, வெங்காயம் மற்றும் மசாலா சேர்த்து அடை போன்று செய்து கொடுத்தால் மிகவும் ருசியாக இருக்கும். இதனை சுட சுட சாப்பிடும் பொழுது இன்னும் வேண்டும், வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். ஒவ்வொருவரும் தனித்தனி பக்குவத்தில் செய்யும் இந்த கோதுமை மாவு தோசையை எப்படி இவ்வளவு சுவையாக செய்ய முடியும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – ஒரு கப், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், வர மிளகாய் – 4, பூண்டு – நான்கு பல், இஞ்சி சிறிய துண்டு – ஒன்று, சீரகம் – ஒரு ஸ்பூன், வெங்காயம் – 1, தக்காளி – 1, கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, எண்ணெய் – 4 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் தக்காளி, வெங்காயம் இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் 4 பல் பூண்டை தோலுரித்து சேர்க்க வேண்டும். பிறகு இதனுடன் 4 வர மிளகாய், சிறிய துண்டு இஞ்சி மற்றும் அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். கடாய் நன்றாக சூடேறியதும் அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் இதில் ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு வதக்கிய இவற்றை ஒரு தட்டிற்கு மாற்றி ஆற வைக்கவேண்டும். பிறகு ஒரு கிண்ணத்தில் ஒரு கப் கோதுமை மாவுடன் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் இரண்டு ஸ்பூன் ரவை, 2 ஸ்பூன் அரிசி மாவு மற்றும் தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு ஆற வைத்துள்ள தக்காளி வெங்காயத்தையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு கருவேப்பிலை, கொத்தமல்லித் தழையையும் பொடியாக நறுக்கி சேர்த்து கலந்து விடவேண்டும். பின்னர் அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, எண்ணெய் தடவி, ஒவ்வொரு கரண்டி மாவாக எடுத்து ஊற்றி தோசை சுட வேண்டும். அவ்வளவுதான் சுவையான கோதுமை மாவு அடை தயாராகிவிடும்

- Advertisement -