நீங்கள் செய்யும் வியாபாரத்தை முன்னேற்றப் பாதையில் செலுத்த சில பரிகாரங்களுடன், சில டிப்ஸ் உங்களுக்காக..

kopuram-praying
- Advertisement -

வேலைக்கு சென்று உழைத்து, பணம் சம்பாதிப்பது ஒரு வகை சந்தோஷம் என்றால், சொந்தத் தொழில் செய்து மற்றவர்களுக்கு வேலை கொடுத்து மகிழ்வது இன்னும் சந்தோஷம் தான். ஏனென்றால் நீங்கள் கொடுக்கும் சம்பளத்தில் ஒரு குடும்பம் வாழுகின்றது என்று நினைத்து பாருங்கள். மற்றவர்களை வாழ வைக்கும் நிம்மதியானது, கோடி ரூபாய் நமக்கு லாபமாக கிடைத்தாலும், அதில் கிடைக்காது. இப்படிப்பட்ட சந்தோஷத்தை நமக்கு தரும் நம் வியாபாரத்தை எந்த ஒரு இடர்பாடுகளும் இன்றி முன்னேற்றப்பாதையில் நஷ்டம் இல்லாமல் வழிநடத்திச் செல்ல நாம் ஆன்மிக ரீதியாகவும், நம் அறிவாற்றல் மூலமாகவும் என்னென்ன செய்யலாம் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

praying

நாம் செய்யும் தொழிலாக இருந்தாலும், வியாபாரமாக இருந்தாலும் நம் வாடிக்கையாளர்களிடம் நாணயமாக நடந்து கொள்ள வேண்டும். அந்த நாணயம் உங்களுக்கான ‘நாணயங்களை'(பணத்தினை) தானாகவே கொண்டு வந்து சேர்த்து விடும். உங்களது வாடிக்கையாளர்களை எக்காரணம் கொண்டும் ஏமாற்றக்கூடாது. நீங்கள் தயாரிக்கப்படும் பொருட்களின் தரமும் நாணயமாக இருக்கவேண்டும். விலையும் நாணயமாக இருக்கவேண்டும். இவை இரண்டும் சரியாக செயல்பட்டால் உங்கள் வியாபாரத்தில் தோல்வியில்லை.

- Advertisement -

வியாபாரத்தில் ஒருவருக்கு லாபம் மட்டுமே கிடைக்காது. லாபத்தின் மூலம் நாம் சந்தோஷம் அடைகின்றோம். ஆனால் நஷ்டம் ஏற்பட்டால் அதிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர சோர்ந்து விடக்கூடாது. நஷ்டத்தில் இருந்து விடுபட்டு எப்படி லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். தோல்வி ஏற்பட்டு விட்டதே என்று உடனடியாக குறுக்கு வழிக்கு எக்காரணத்தைக் கொண்டும் சென்று விடக்கூடாது. உங்களது நேர்மை தான் உங்களுக்கான நிரந்தர வெற்றியை தேடித்தரும்.

sucess

இவை தவிர உங்களுக்கு வியாபாரத்தில் பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தால் ஆன்மீக ரீதியாக நீங்கள் சில மாற்றத்தினை உங்களது அலுவலகத்தில் கொண்டுவர வேண்டும்.

- Advertisement -

நீங்கள் சொந்தமாக தொழில் செய்யும் அலுவலகமாக இருந்தாலும், கடையாக இருந்தாலும் முதலில் அதனை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் ஒரு கண்ணாடி பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் மஞ்சள் நிறப் பூக்களை வாடாமல் போட்டு வையுங்கள்.

தொழில் செய்யும் இடத்தில் உள்ள சாமி படத்திற்கு முன்பு ஒரு கண்ணாடி டம்ளரில், பச்சை கற்பூரமும், மஞ்சள் தூளும் கலந்த நீரில் ஒரு எலுமிச்சை பழத்தை போட்டு வைக்க வேண்டும்.

- Advertisement -

lemon-glass

உங்களது அலுவலகத்திற்கு உள்ளே நுழையும் திசைக்கு எதிர் பக்கத்தில் ஒரு பெரிய கண்ணாடியை மாட்டி வைப்பது நேர்மறை ஆற்றலை கொடுக்கும். அதாவது நீங்கள் உள்ளே நுழையும் போது உங்கள் முகத்தை நீங்கள் கண்ணாடியில் காண்பது போல இருக்க வேண்டும். இவை அனைத்தும் உங்கள் வர்த்தகத்தின் கண் திருஷ்டியை முழுமையாக நீக்கும் தன்மை கொண்டது.

அடுத்ததாக நவ கிரகங்களுக்கு உகந்த நவதானியத்தை சிறிதளவு எடுத்து மஞ்சள் துணியில் வைத்து ஒரு நெல்லிக்காய் அளவு மூட்டையாகக் கட்டிக் கொள்ளுங்கள். மூட்டை கட்டுவதற்காக பயன்படுத்தும் நூலும் மஞ்சள் நிறத்தில் தான் இருக்க வேண்டும். அந்த சிறிய அளவிலான மூட்டையை நீங்கள் தொழில் செய்யும் இடத்தின் வாசல் கதவிற்கு உள்பகுதியில் மேல் புறத்தில் ஒரு ஆணியில் கட்டி தொங்கவிட வேண்டும். சிறிதளவு நவதானியத்தை பணம் வைக்கும் பெட்டியில் போட்டு வையுங்கள்.

yellow

மாதம் ஒருமுறை பழைய தானியங்களை எடுத்துவிட்டு புதியதாக நவதானியங்களை வாங்கி வையுங்கள். இப்படி செய்துவர உங்களுக்கு ஜாதகத்தில் ஏதாவது ஒரு தோஷம் இருந்தால் கூட அது சரியாகிவிடும். நவ கிரகங்களுக்கு உகந்த நவதானியமானது வியாபாரத்தில் உள்ள தடங்கல்களை போக்கக்கூடியது. உங்களது விடாமுயற்சியுடன் இந்த பரிகாரங்களும் சேரும்போது வெற்றி நிச்சயமாக கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே
இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Viyabaram peruga pariharam Tamil. Viyabaram peruga Tamil. Viyabaram selika Tamil Viyabaram sirakka Tamil.

- Advertisement -