வீட்டில், சமையலறையில் இருக்கும் கரப்பான் பூச்சியை கெமிக்கல் இல்லாமல் ஒரேடியாக விரட்டி, மீண்டும் நுழைய விடாமல் செய்து விடலாமா?

cockroach-salt

வீட்டில் மற்றும் சமையலறையில் குட்டி குட்டியாக இருக்கும் கரப்பான் பூச்சிகள் முதல், பறக்கின்ற பெரிய கரப்பான் பூச்சிகள் வரை தொல்லைகள் கொடுத்துக் கொண்டிருக்கும். மற்ற இடங்களை விட, சமையலறையில் கட்டாயம் கரப்பான் பூச்சிகளை விரட்டியடிப்பது சவாலாகவே இருக்கும். நாம் என்ன தான் கெமிக்கல் கலந்த ஸ்ப்ரே பாட்டில்களை வைத்திருந்தாலும் அவைகளில் நமக்கு திருப்தியே இருக்காது. அதனால் ஏதாவது பாதிப்புகள் வருமா? என்கிற பயமும் இருக்கும். இதில் இருந்து எப்படி தப்பிப்பது?

cockroach

கெமிக்கல் சேர்க்காமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஒரு சிறிய கரப்பான் பூச்சி கூட நுழைய முடியாத அளவிற்கு செய்து விடலாம். அதை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள். நாம் வாங்கும் கரப்பான்பூச்சி ஒழிக்கும் ஸ்பிரே பாட்டில்களில் இருக்கும் கெமிக்கல் ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. அதனை சுவாசிப்பவர்களுக்கு சுவாச கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. எனவே அதனை பெரும்பாலானோர் வாங்கி பயன்படுத்துவது கிடையாது.

கெமிக்கல் இல்லாமல் வீட்டில் சுலபமாக கரப்பான் பூச்சிகளை நுழைய விடாமல் தடுக்கும் மருந்தைத் தயாரிக்கலாம். ஒரு டம்ளர் தண்ணீரில், ஒரு ஸ்பூன் அளவிற்கு நீங்கள் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பூவை ஊற்றிக் கொள்ளுங்கள். எந்த வகையான ஷாம்பூவாக இருந்தாலும் பரவாயில்லை. அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவிற்கு வினிகர் ஊற்றி கொள்ளுங்கள். பின்னர் கல் உப்பு ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். கல் உப்பு கரைந்து வந்ததும், அதனை வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தாங்க ரொம்ப ஈஸியா செய்தாச்சு.

salt

இதனை உங்களுக்கு எங்கெல்லாம் கரப்பான் பூச்சிகள் வரும் என்று தோன்றுகிறதோ! அங்கெல்லாம் ஸ்ப்ரே செய்து வைத்து விடுங்கள். இதனை இரவு நேரத்தில் செய்யுங்கள். ஏனெனில் பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் கரப்பான் பூச்சிகள் வெளியே நடமாடிக் கொண்டிருக்கும். நாம் நடு ராத்திரியில் எழுந்து போய் சமையலறைக்கு பார்த்தால் அப்படியே ஆச்சரியப்பட்டு போய்விடுவோம். எங்கிருந்து தான் வரும் என்று தெரியாது. குட்டி குட்டி கரப்பான் பூச்சிகள் ஆங்காங்கு சுற்றிக் கொண்டிருக்கும்.

- Advertisement -

இந்த கரப்பான் பூச்சிகள் நாம் சாப்பிடும் பாத்திரங்களிலும் போய் உட்கார்ந்து கொள்ளும். உட்காருவது மட்டுமில்லாமல் அதன் கழிவுகளை அதில் விட்டு சென்றுவிடும். கண்களுக்கு தெரியாத இந்த கழிவுகளை தெரியாமல் நாம் உடலுக்குள் அனுப்பி விடுகிறோம். இதனால் உடலில் தேவையற்ற பாதிப்புகள் ஏற்பட்டு விடுகிறது. அதனால் தான் ஒவ்வொரு முறை நீங்கள் சாப்பிடும் தட்டுகளை ஒரு முறை நன்கு கழுவி விட்டு பின்னர் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

cockroach1

உங்கள் வீட்டில் பெரும்பாலும் சமையலறையில் இருக்கும் சிங்கிள் இருந்து தான் கரப்பான் பூச்சிகள் வெளியே வரும். எனவே அந்த இடத்தில் எல்லாம் இதை ஸ்பிரே செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் தண்ணீர் வெளியே செல்லும் குழாய் இருக்கும் பகுதிகளிலும் அடித்து விடுங்கள். சிலிண்டர் வைத்திருக்கும் இடங்களில் சுற்றியும் அடித்து விடுங்கள். இந்த கலவையில் எந்த கெமிக்கல் பொருட்களும் இல்லை என்பதால் உடலுக்கு ஆரோக்கியமானது தான். இதனால் எந்த பாதிப்புகளும் வராது. மேலும் அடுப்பின் பின்புறத்தில், அலமாரிகளில் கீழ்பகுதியில், வாஷ்பேஷன் இருந்தால் அதன் குழாய்களிலும் அடித்து விடுங்கள். பின்னர் ஒரு கரப்பான் பூச்சி கூட எட்டிப்பார்க்காது. வீடும் ஆரோக்கியமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே
ஒரே நாளில் 1 பைசா செலவில்லாமல் இந்த 1 பொருளை மட்டும் வைத்தே எலி மற்றும் பெருச்சாளியை விரட்டி அடித்து விடலாமா?

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.