உங்களின் கனவு இல்லத்தை நனவாக்க வேண்டுமா? ஐயப்பன் சன்னிதியில் இருந்து இந்தக் கல்லை எடுத்து வாருங்கள்

iyyappan-home

இன்று பலருடைய மிகப் பெரிய கனவாக இருப்பது சொந்த வீடு தான். எப்படியாவது முட்டி, மோதிக்கொண்டு எப்பாடுபட்டாவது ஒரு சொந்த வீடு கட்டி விட வேண்டும் என்று இரவில் சரியான உறக்கம் கூட இல்லாமல் இருப்போர் எண்ணிக்கை அதிகம் தான் என்று கூறினால் அது மிகையாகாது. தினம் தினம் வாடகை வீட்டில் ஏற்படும் சங்கடங்களை சகித்து கொண்டு காலத்தை கடத்தி கொண்டிருப்போர் ஏராளம் இங்கே… இவர்களில் சிலர் ஆசை ஆசையாக ஒரு இடம் வாங்கி அதில் வீடு கட்டுவதற்கான முயற்சிகளில் இறங்கி இருப்பார்கள். ஆனால் அந்த வீட்டை முழுமையாக கட்டி முடிப்பதற்குள் ஆயிரம் இடைஞ்சல்கள் வரும். பிரச்சனைகளை எதிர்கொண்டு போராடினாலும் தீர்வு கிட்டாமல் இருக்கும். பணப் பற்றாக்குறை, நினைத்த இடத்தில் இருந்து வராத பணம், பருவ நிலை மாற்றம், குடும்பத்தில் பிரச்சனை என்று ஏதாவது ஒரு தடங்கல்கள் வந்து கொண்டே இருக்கும். இதனால் கட்டிட பணி பாதியில் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். என்ன செய்வதென்றே புரியாமல் விழி பிதுங்கி நின்று கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு தான் இந்த பதிவு.

நீங்கள் வாங்கிய இடத்தில் அதற்கு முன்னர் அல்லது பல காலம் முன்பு சுடுகாடு, இடுகாடு போன்றவை இருந்து இருக்கலாம். பாம்பு புற்று இருந்து அவை அகற்றபட்டு இருக்கலாம். நரபலி நடந்து இருக்கலாம். பில்லி, சூனியம், ஏவல் போன்ற தீய சக்திகள் ஏவப்பட்டு இருக்கலாம். பெண் சாபம் ஏற்பட்டிருக்கலாம். கண் திருஷ்டி உண்டாகி இருக்கலாம். இப்படி பல காரணங்கள் இருக்கின்றன. இதனால் தான் உங்களால் அந்த இடத்தில் முழுமையாக வீடு கட்ட முடியாமல் இருக்கிறது. கவலை வேண்டாம். இதற்கு எளிய பரிகாரம் உள்ளது. அதை செய்தால் போதும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கி விரைவில் உங்கள் புதுமனை புகுவிழா அழைப்பிதல் அச்சடித்து விடலாம்.

உங்கள் இல்லத்திற்கு அருகாமையில் இருக்கும் ஒரு ஐயப்பன் கோவிலுக்கு செல்லுங்கள். தேவஸ்தான நிர்வாகத்திடம் சென்று உங்கள் பிரச்சனையை கூறி கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளுங்கள். உங்களது வீடு கட்டும் பணிக்காக வாங்கிய ஜல்லி கற்களில் சிறிய கல் ஒன்றை எடுத்து சென்று கோவிலில் கொடுங்கள். அங்கிருக்கும் நம்பூதிரிகள் அந்த கல்லை ஐய்யப்பன் திருவடியில் வைத்து முறையான ரிக் வேதத்தை சுருங்க உரைப்பார்கள். மேலும் சில மந்திர உச்சாடனம் செய்வார்கள். பூஜை முடிந்த பின் அந்த கல்லை கொடுப்பார்கள். அதை பெற்றுக்கொண்டு வாருங்கள்.

vastu

உங்களின் கனவு இல்லத்திற்கு அஸ்திவாரம் இருக்கும் அல்லவா? அஸ்திவாரத்தின் ஈசானிய மூலையில் இந்த மந்திர உச்சாடனம் செய்த கல்லை போட்டு மூடி விடுங்கள். அதன் பின் பணி தொடர ஆயத்தமாகுங்கள். எந்த தீய சக்திகளின் பிடியில் அந்த வீடு அகப்பட்டு இருந்தாலும் விடுபட்டு விடும். நிழுவையில் இருக்கும் பணி வெகு விரைவாக எந்த தடையும் இன்றி கட்டி முடிக்கப்படும். வீடு காட்டுவது மட்டும் இல்லை. அதற்கு கிரக பிரவேஷம் செய்யும் போதும் தகுந்த மாதம், நாள், நட்சத்திரம், திதி, லக்னம் என்று அனைத்தும் பார்த்து செய்தால் என்றென்றும் வளமுடன், நலமுடன் அந்த இல்லத்தில் நீங்கள் வாழ முடியும்.

இதையும் படிக்கலாமே
கெட்ட கனவு வராமல் தடுக்க இந்த தண்ணீரில் குளித்து, இந்த கயிறு கட்டி, இந்த இறைவனை வழிபட்டாலே போதும்?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Veedu katta pariharam in Tamil. Sondha veedu katta Tamil. Veedu kattum yogam in Tamil. Veedu kattum yogam in Tamil. Sontha veedu vanga pariharam in Tamil. Sontha veedu amaiya.