சமையல் அறையில் சுவர் ஓரங்களில் பல்லி, கரப்பான், எறும்பு தொல்லை முற்றிலும் ஒழிய உங்க வீட்டில் இருக்கும் இந்த 2 பொருள் போதுமே! பூச்சிகளை விரட்டி அடிக்கும் எளிய டிப்ஸ்.

insects-powder
- Advertisement -

வீடு என்றால் இதெல்லாம் இருக்கத் தான் செய்கிறது. இதை சகித்துக் கொண்டு செல்லவும் முடியாமல், துரத்தவும் முடியாமல் இருப்போமே அதுதான் கொடுமையாக இருக்கும். சுவர் ஓரங்களில் எங்கு பார்த்தாலும் பல்லி நடமாட்டம் இருந்தால், ஒரு விதமான அருவருப்பு உண்டாகும். சமையல் அறையில் கரப்பான் தொல்லையும், எறும்பு தொல்லையும் இருந்தால் அதை எப்படி ரொம்ப சுலபமாக விரட்டி அடிப்பது? பல்லி தொந்தரவை எளிதாக எப்படி தீர்ப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பல்லிகள் வீட்டில் இருந்தால் ஒரு வகையில் நல்லது தான் என்று கூறுவார்கள். பல்லி அதிகம் இருக்கும் வீடுகளில் பூச்சி தொந்தரவு கம்மியாக இருக்கும். பூச்சிகளை அதுவே சாப்பிட்டு விடும் என்பதால், பல்லிகள் இருப்பதை பலரும் கண்டு கொள்வது இல்லை ஆனால் பல்லி, சமையல் அறையில் இருந்தால் என்ன செய்வது? திடீரென நாம் சமையல் செய்யும் பாத்திரத்தில் விழுந்து விட்டால் என்ன செய்வது? என்பதால் சமையல் அறையில் கண்டிப்பாக பல்லி இருப்பதை அனுமதிக்க கூடாது.

- Advertisement -

அது மட்டும் அல்லாமல் இரவு நேரங்களில் கரப்பான் பூச்சி, பல்லிகள் நடமாட்டமும் சமையல் அறையில் இருந்தால் அது பாத்திரங்களின் மீது ஏறி செல்லும். கண்ணுக்கு தெரியாத எச்சங்களை இட்டு செல்லும். இதனால் தேவையில்லாத ஆரோக்கிய குறைபாடு ஏற்படுவதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு. எனவே பல்லி, கரப்பான் போன்றவற்றிடமிருந்து உங்களுடைய சமையலறை பொருட்களை பாதுகாக்க நீங்கள் இந்த எளிய விஷயத்தை செய்து பார்க்கலாம்.

முக அழகிற்கு பயன்படுத்தும் டால்கம் பவுடர் முகத்தை மட்டும் அல்லாமல், பூச்சிகளையும் விரட்டி அடிக்கும் ஆற்றல் கொண்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? டால்கம் பவுடரில் இருக்கும் ரசாயன மூலக்கூறுகள் பல்லிகளை ஓட ஓட விரட்டி அடித்து விடும். அதுபோல கரப்பான் தொந்தரவு கொஞ்சம் கூட இல்லாமல் இருக்க இந்த ஒரு விஷயத்தை பயன்படுத்தி பார்க்கலாம். சமையல் கட்டில் இனிப்பை தேடி வரும் எறும்புகள் இனிப்பை மட்டும் அல்லாமல், மற்ற சில பொருட்களையும் நாசம் செய்து விட்டு சென்றுவிடும். இதற்காகவே பல டப்பாக்களை சரியாக மூடி வைக்க வேண்டியதாக இருக்கும்.

- Advertisement -

செய்து வைத்த சமையல் பொருட்களிலும் சில சமயங்களில் எறும்புகள் வந்து விட வாய்ப்புகள் உண்டு. இப்படி படையெடுக்கும் எறும்புகளை துரத்தி அடிப்பதற்கு முகத்திற்கு உபயோகிக்கும் டால்கம் பவுடருடன், கொஞ்சம் ஷாம்புவை கலந்து கொள்ளுங்கள். அதில் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு நீர்க்க கரைத்துக் கொள்ளுங்கள். இதை நன்கு வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் சமையல் அறையில் எங்கெல்லாம் பல்லி மற்றும் கரப்பான் தொல்லை இருக்கிறதோ, அங்கெல்லாம் ஸ்பிரே செய்து விடுங்கள். அதே போல எறும்புகள் வரும் இடங்களிலும் ஸ்பிரே செய்து கொள்ளுங்கள். தரையில் ஸ்ப்ரே செய்தால் பின் அதை துடைத்து விடுங்கள், அப்படியே விட்டுவிட்டால் வழுக்கி விழுவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏனென்றால் அதில் ஷாம்பூ சேர்க்கப்பட்டுள்ளது. எனவே ஒரு காட்டன் துணியால் துடைத்து எடுத்து விடுங்கள். அதன் வாசத்திற்கே இவை எல்லாம் வரவே செய்யாது. குறிப்பாக எறும்பு மற்றும் கரப்பான் தொல்லை இருக்கவே இருக்காது. எப்போதும் நீங்கள் பாத்திரம் தேய்க்கும் சிங்கில் நாப்தலின் பால்ஸ் போட்டு வையுங்கள். இதன் வாசத்திற்கு பூச்சிகள் அண்டாது. சமையலறையில் பெரும்பாலான பூச்சிகள் இந்த சிங்க்கின் மூலமாகவே வருகிறது.

- Advertisement -