ஒரே ராசி, ஒரே நட்சத்திரத்தில் இரண்டு பேர் ஒரே வீட்டில் இருக்கக் கூடாதா? அப்படி இருந்தால் பரிகாரங்கள் ஏதேனும் செய்ய வேண்டுமா?

astro-home

சில பேரது வீட்டில் ஒரே ராசி, ஒரே நட்சத்திரத்தில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்டோர் இருப்பார்கள். அப்பாவின்  ராசியிலும், நட்சத்திரத்திலும் குழந்தை பிறந்தால் என்ன செய்வது?

Nakshatra

அப்பாவின் ராசி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை இது. ஒரே ராசியில் இருக்கும் இருவரும், ஒரே வீட்டில் இருக்கக்கூடாது என்று குழந்தையை தூக்கி தானம் செய்துவிட முடியுமா? அப்படியே உங்களது சொந்தக்காரரது வீட்டில் கொடுத்து ஒரு குழந்தை வளர்க்கலாம் என்று வைத்துக்கொள்வோம். அடுத்த குழந்தையும் அதே நட்சத்திரத்தில் பிறந்தால் என்ன செய்வீர்கள்? நிச்சயமாக அடுத்தவர்களிடம் கொடுக்க முடியாது. ஒரே ராசியில், ஒரே நட்சத்திரத்தில் ஒரு குடும்பத்தில் இரண்டு பேர் இருந்தால் அவர்களுக்கு இன்பமும், துன்பமும் ஒரே சமயத்தில் வரும் என்பதால் தான் நம் முன்னோர்கள் இப்படி ஒரே வீட்டு இருக்கக் கூடாது என்று கூறியுள்ளார்கள். இன்பம் ஒருசேர வந்தால் பிரச்சனை இல்லை. அதுவே துன்பம் இருவருக்கும் அதிகப்படியாக வரும் சமயத்தில் சிறிது கஷ்டம் தான். இன்பம் வரும் சமயத்தில் கொண்டாடியதை போல், துன்பம் வரும் சமயத்திலும் ஏற்றுக் கொள்வதுதான் இயற்கை. ஆனால் அதற்காக நம் குடும்பத்தை சேர்ந்தவர்களை பிரித்து வைப்பது என்பது இயலாத காரியம் ஆகும். ஒன்றை நம் மனதில் நன்றாக பதிய வைத்துக்கொள்ள வேண்டும். நம் முன்னோர்கள் ‘இது தவறு’ என்று ஒரு சாஸ்திரத்தை கூறினால் அதற்கான பரிகாரத்தையும், சேர்த்தே கூறிவிடுவார்கள். உங்களது வீட்டிலும் ஒரே ராசி, ஒரே நட்சத்திரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டோர் இருக்கின்றீர்களா? பயப்பட வேண்டாம். ராசியும், நட்சத்திரமும் பிரச்சினை என்று உங்களுக்குத் தோன்றினால் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நிச்சயம் நல்ல பலனை அடையலாம்.

ஒரு சில பேர் அப்பாவின் ராசியிலும் நட்சத்திரத்திலும் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தையை கோவிலுக்கு தத்து கொடுத்துவிட்டு மீண்டும் வாங்கிக் கொள்வார்கள். இந்த பரிகாரமானது குழந்தை பருவத்தில் தான் செய்ய முடியும். ராசி நட்சத்திரம் இவைகளையெல்லாம் பொருட்படுத்தாமல் குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்து விட்டார்கள். இவர்களுக்கு என்ன செய்வது? குருவாயூர் கோவிலில் துலாபாரம் கொடுக்கலாம். துலாபாரம் என்பது எடைக்கு எடையாக வாழைப்பழம், பேரிச்சம்பழம், மண்டை வெல்லம் அல்லது வசதி படைத்தவர்களாக இருந்தால் பணத்தைக் கூட தானமாக கொடுப்பது மிகவும் சிறப்பான பரிகாரம்.

thulabharam

இப்படி துலாபாரத்தை வீட்டில் ஒரே ராசியில் இருக்கும் எவராவது ஒருவருக்கு மட்டும் கொடுத்தால் போதுமா? என்ற சந்தேகமும் வரும். உங்களது வீட்டில் ஒரே ராசியில் ஒரே நட்சத்திரத்தில் எத்தனை பேர் இருக்கின்றார்களோ அவர்கள் அனைவருக்குமே இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஒரே சமயத்தில் செய்ய முடியவில்லை என்றால் நாட்களை மட்டும் மாற்றிக் கொள்ளலாம். ஒரே ராசி, ஒரே நட்சத்திரத்தில் முடிந்தவரை ஜாதகம் பார்க்கும் போதே திருமணம் செய்யவேண்டாம் என்று சில ஜோசியர்கள் கூறிவிடுவார்கள். ஜாதகம் பார்க்காமல் நடக்கும் எத்தனையோ திருமணங்கள் உள்ளன. அவர்களுக்கு ஒரே ராசி ஒரே நட்சத்திரம் இருந்தால் கூட இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம்.

- Advertisement -

இது தவிர கடலோரத்தில் இருக்கும் கோவில்களுக்கு சென்று ஆண்டுக்கு ஒரு முறை, குடும்பத்தோடு அந்த கடலில் மூழ்கி குளித்து அங்கு இருக்கும் இறைவனை வழிபட்டு வருவது நல்ல பரிகாரமாக கூறப்பட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவில், இராமேஸ்வரம் இப்படிப்பட்ட கோவில்களுக்குச் செல்வது நன்மை தரும். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நவகிரக கோவிலுக்குச் சென்று எள் விளக்கு ஏற்றி 27 முறை சுற்றி வந்தால் ஜாதகத்தில் இருக்கும் தாக்கங்கள் குறையும்.

el deepam

ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் காலங்களில் தான் பிரச்சனைகள் மேலோங்குவது போல தெரியும். பிரச்சினைகளை சமாளித்து கொள்ள மன தைரியத்தோடும், நேர்மையோடும், துணிச்சலோடும் நன்மையை மட்டும் மனதில் நினைத்துக் கொண்டு செயல்பட்டால் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். மனோதைரியம் உள்ளவர்களை எப்படிப்பட்ட பிரச்சினையையும் தாக்காது என்பதை மனதில் வைத்துக்கொண்டு தைரியத்தோடு செயல்பட்டால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

இதையும் படிக்கலாமே
மேஷ ராசிக்காரர்கள் இதை செய்தால் வாழ்க்கையே மாறிவிடுமாம். ‘லால் கிதாப்’ என்னும் ஜோதிட நூல் கூறும் பரிகாரங்கள்.

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Ore rasi natchathiram. Same rashi same nakshatra. Same rasi in family. Father and son having same rasi and nakshatra. Same rasi natchathiram.