சொந்த வீடு வாங்க 5 ரூபாய் நாணயமும், உடைந்த சில கற்களும் போதும்.

sondha-veedu

மனிதனாக பிறந்த அனைவருக்குமே சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆசை என்று சொல்வதை விட அது ஒரு பெரிய கனவாகவே கருதப்படுகிறது. மனிதர்களுக்கு மட்டும் தானா அந்த ஆசை! ‘எலி வளையானாலும் தனி வளை வேண்டும்’ என்று பிராணிகளுக்கு கூட தனி வீடு வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக அந்த காலத்திலேயே பழமொழி கூறப்பட்டுள்ளது. இப்படியிருக்க சொந்த வீடு வாங்கவேண்டும் என்ற எண்ணத்தோடு, அதற்கான முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். முதலில் என்ன செய்வது? நிலம் இல்லாதவர்கள் நிலத்தை வாங்குவதற்கு மாதம்தோறும் ஒரு தொகையை கட்டாயமாக ஒதுக்கி வைத்துவிட்டு தான் பின்பு செலவுகளை சமாளிக்க வேண்டும். தினம் தினம் மனதில் சொந்த வீடு கட்ட வேண்டும் என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். நாம் எதை நம் சிந்தனையில் திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டே இருக்கின்றோமோ அது கூடிய விரைவில் நடந்துவிடும் என்பது நிதர்சனமான உண்மை.

house

பலபேர் நம்மிடம் வந்து சொல்லுவார்கள் ‘நான் கெட்டது ஏதாவது ஒன்றை நினைத்தால் அது உடனே நடந்து விடுகிறது’. என்று! உண்மை அது அல்ல. அவர்கள் ‘கெட்டதை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பார்கள்’. நல்லதை நினைத்தால் தானே நடப்பதற்கு! இதனால் கொஞ்சம் நல்ல சிந்தனையை மட்டுமாவது நம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள ஒரு சிறந்த பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உடனடியாக இந்தபரிகாரத்தை செய்து முடித்து விட்டால் சொந்த வீடு கட்டி விட முடியுமா என்ற கேள்வியை எழுப்பி விடாதீர்கள். சொந்த வீடு கட்டுவதற்கான பரிகாரத்தை செய்திருக்கின்றோம், என்ற அந்த நேர்மறை ஆற்றலான மனத் திருப்தியே உங்களுக்கு சொந்த வீடு கட்டுவதற்கான வழியை சுலபமாக காட்டி விடும் என்பதை முதலில் உணருங்கள். பரிகாரங்கள், வழியை காட்டுவதற்கான வரைபடங்களே தவிர, எந்தவிதமான மாயாஜால வித்தைகள் இல்லை.

meditation

முதலில் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு 6 வாரம் செவ்வாய்க்கிழமை அன்று சென்று வாருங்கள். இந்த முருகன் கோவிலுக்கு சென்று வழிபடுபவர்களின் பிரார்த்தனையானது நிச்சயம் நிறைவேறாமல் இருந்தது இல்லை. இந்த கோவிலுக்கு சென்றவர்களுக்கு உண்மை கண்டிப்பாக தெரியும். அதிலும் குறிப்பாக சொந்த வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த கோவிலுக்கு சென்று முருகனை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இதோடு சேர்த்து இந்த கோவிலுக்கு பின்புறத்தில் உடைந்த சிறிய செங்கற்களை எடுத்தே அடுக்கி வைத்தால், வீடு கட்டிவிடலாம் என்ற நம்பிக்கை பக்தர்களுக்கு இது நாள் வரை இருந்து வருகிறது. இப்படி கற்களை அடுக்கி வைத்தவர்கள் கூடியவிரைவில் வீடுகட்டி அதையும் அனுபவபூர்வமாக உணர்ந்து இருக்கின்றார்கள். நம்பிக்கையுள்ளவர்கள் இதை பின்பற்றலாம். (இந்தக் கோவில் சென்னையிலிருந்து கொல்கத்தா செல்லும் பாதையில் 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து செங்குன்றம் செல்லும் பாதையில் செல்ல வேண்டும்.)

- Advertisement -

murugan

முருகப்பெருமானை தரிசனம் செய்ததோடு சேர்த்து உங்களது வீட்டிலேயே காமாட்சி அம்மன் விளக்கை வெள்ளிக்கிழமை ஏற்றும்போது ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை விளக்கின் அடிப்பகுதியில் வைத்து அதன் பின்பு தீபம் ஏற்றுங்கள். அதாவது வியாழக்கிழமையன்று பூஜை விளக்கை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் குங்குமம் வைத்து தயார் செய்து கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை அன்று காலையில் முதலில் ஐந்து ரூபாய் நாணயத்தை காமாட்சி அம்மன் விளக்கு கீழே வைத்துவிட வேண்டும். அதன் பின்பு எண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு தீபத்தை ஏற்ற வேண்டும். இந்தப் பரிகாரம் இதுவரை வீடுகட்டாதவர்களுக்கு.

உங்களிடம் ஒரு சொந்தவீடு உள்ளது. மேலும் மேலும் சொத்து சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காமாட்சி அம்மன் விளக்கில் எண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றுவதற்கு முன்பாக ஐந்து ரூபாய் நாணயத்தை அந்த எணணெய்க்கு உள்ளே போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இப்படி செய்தால் மேலும் மேலும் சொத்துக்கள் சேரும் என்றும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை செய்ய வேண்டும்.

venkala vilaku

அடுத்த வெள்ளிக்கிழமை வரும்போது அந்த ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். மறுவாரம் தீபம் ஏற்ற புது ஐந்து ரூபாய் நாணயத்தில் தான் பயன்படுத்த வேண்டும். உங்களது சொந்த வீடு கட்ட வேண்டும் என்று வேண்டுதல் நிறைவேறும் வரை இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து கொண்டே வரலாம். சேர்த்து வைத்து வந்த அந்த ஐந்து ரூபாய் நாணயத்தை ஏதாவது ஒரு நல்ல தர்ம காரியத்திற்கு பயன்படுத்துவது மிகவும் நல்லது. இந்த பரிகாரங்களை தொடர்ந்து செய்து வரும்போது நீங்கள் வீடு கட்டுவதற்குத் தேவையான முயற்சிகளை செய்து கொண்டே இருக்க வேண்டும். வீடு கட்ட எப்படிப்பட்ட தடை இருந்தாலும் அது நிச்சயம் விலகி உங்களால் வீடு கட்ட முடியும். நம்பிக்கை உள்ளவர்கள், நம்பிக்கையோடு பரிகாரத்தை செய்து பலன் பெறுங்கள். இப்படி செய்தால் வீடு கட்டி விட முடியுமா? என்று ஒரு துளி சந்தேகம் உள்ளவர்கள் கூட பரிகாரத்தை செய்தால் பலனளிக்காது.

இதையும் படிக்கலாமே
சிவராத்திரி அன்று சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்தால் என்ன பலன்?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Sontha veedu katta Tamil. sontha veedu vanga. Sontha veedu vanga pariharam. Sontha veedu yogam