இனிமே நீங்க வாரம் முழுவதும் அசைவம் சமைச்சாலும் கொஞ்சம் கூட அதன் வாடையே வராது. நீங்களே அசைவம் சமைச்சேன்னு சொன்னா கூட யாரும் நம்ப மாட்டாங்க. வீடு அவ்வளவு நறுமணமா இருக்கும். இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்.

fish cooking
- Advertisement -

அசைவ உணவுகளை சமைப்பது, சாப்பிடுவது என இதையெல்லாம் விரும்பி செய்தாலும் அதை சமைத்த பிறகு வீடு, பாத்திரம், பிரட்ஜ் என அனைத்து இடத்திலும் வீசும். இந்த அசைவ வாடையை சுத்தம் செய்வது பெரிய வேலையாக இருக்கும். அதிலும் மீன் வகைகளை சமைத்து விட்டால் சொல்லவே தேவையில்லை வாடை பக்கத்து வீடு வரை பேசும். இதனலேயே பெரும்பாலானோர் அசைவ வகைகளை இப்பொழுதெல்லாம் வெளியில் வாங்கி சாப்பிடும் பழக்கத்திற்கு வந்து விட்டார்கள். இது போன்று பிரச்சனைகளை சமாளிக்க எளிய வழிகளை தான் இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

அசைவம் சமைத்த வாடை பாத்திரங்களில் வராமல் இருக்க முதலில் அசைவம் சமைப்பதற்கு என தனியாக பாத்திரங்களை ஒதுக்கி சமைப்பது நல்லது. சமைத்த உடன் அந்த பாத்திரங்களை அப்படியே போட்டு வைக்காமல் உடனே கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரை அதில் ஊற்றி வைத்தால் பாத்திரங்களில் வாடை இல்லாமல் இருக்கும்.

- Advertisement -

இப்போது அசைவ வாடை வராமல் இருக்க ஒரு லிக்வீட் தயார் செய்து கொள்ளலாம். ஒரு பவுலில் இரண்டு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா, ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் கொஞ்சமாக ஷாம்பூ கலந்து இத்துடன் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக குலுக்கி வடிகட்டி ஸ்பிரே பாட்டில் ஊற்றி அசைவம் சமைக்கும் நாட்களில் வீடு முழுவதும் ஸ்பிரே பண்ணி விட்டால் போதும். அசைவம் சமைத்த வாடை வராது.

இதே போல் பேக்கிங் சோடா எலுமிச்சை பழத்துடன் ஷாம்புவுக்கு பதிலாக பாத்திரம் தேய்க்கும் லிக்விட் சேர்த்து இந்த கலவையை தொட்டு பாத்திரங்களை தேய்த்து சுத்தம் செய்தால் பாத்திரங்களிலும் அசைவம் சமைத்த வாடையை வராது.

- Advertisement -

நாம் அசைவம் வாங்கி பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தும் போது அதிலும் கூட அசைவம் சமைத்த வாடை வீசும். அதற்கும் இதே போல பேக்கிங் சோடாவுடன் எலுமிச்சை பழத்திற்கு பதிலாக வினிகரை சேர்த்து ஸ்ப்ரே பாட்டில் கலந்து ஃப்ரிட்ஜில் ஸ்பிரே செய்து ஐந்து நிமிடம் கழித்து ஸ்பிரே செய்த இடங்களில் துணி வைத்து துடைத்து விடுங்கள். மற்ற நேரங்களில் கூட பிரிட்ஜை இப்படி சுத்தம் செய்தால், எப்போதும் வாடை இன்றி சுத்தமாக இருக்கும். இதை செய்யும் போது ஃப்ரிட்ஜில் இருக்கும் பொருட்களை எடுத்து வைத்து விட்டு செய்ய வேண்டும்.

காலை வேலைக்கு செல்லும் அவசரத்தில் சமைத்து விட்டீர்கள் இப்படியெல்லாம் செய்ய உங்களுக்கு நேரம் இல்லாத பட்சத்தில் சட்டென்று உபயோகி ப்படும் படியான ஒரு ஐடியாவும் உண்டு. அதற்கு அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாய் வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு அதிகம் பயன்படுத்தாத கடாய் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடுங்கள்.

- Advertisement -

தண்ணீர் கொதிக்கும் பொழுது அதில் ஒரு மூன்று ரூபாய் கம்போர்ட் பாக்கெட்டில் பாதி அளவை மட்டும் ஊற்றி அப்படியே கொதிக்க விடுங்கள். சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு அந்தத் தண்ணீரை வைத்து கிச்சன் மேடை போன்றவற்றையெல்லாம் துடைத்து விடுங்கள். மீதம் இருக்கும் தண்ணீரை சிங்கில் ஊற்றி விட்டால் நீங்கள் அசைவம் செய்த வாடை கொஞ்சம் கூட இருக்காது.

இதையும் படிக்கலாமே: வெறும் அஞ்சு ரூபாய் செலவில் உப்பு கறை படிந்த பாத்ரூம் டைல்ஸை கை வலிக்க தேய்க்காமல் பளிச்ன்னு மாத்திடலாம். இதை ட்ரை பண்ண பிறகு உங்க பாத்ரூம் டைல்ஸ் புதுசா போட்ட டைல்ஸ் மாதிரி பளப்பளன்னு மின்னும்.

இதை செய்த பிறகு நீங்கள் அன்று அசைவம் செய்தீர்கள் என்று சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு வீடு நறுமணத்துடன் இருக்கும். இந்த குறிப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -