என்னதான் பார்த்து பார்த்து கவனமாக துணிகளை துவைத்தாலும், சில நேரங்களில் குழந்தைகள் இருக்கும் இல்லங்களில் துணியின் மீது விடாப்பிடியான கறைகள் பட்டு விடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். எப்பேர்பட்ட கறைகளையும் எளிதாக நீக்கக் கூடிய இந்த டிப்ஸ் கண்டிப்பாக உங்களுக்கு உபயோகமாக இருக்கும். துணிக் கறை நீங்க எளிதான வழிமுறையை தான் இந்த வீட்டு குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து காண இருக்கிறோம்.
குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் பொழுது அவசர அவசரமாக சீருடைகளை அயர்ன் செய்து பர்ஃபெக்ட்டாக அனுப்புகின்றோம். ஆனால் வரும் பொழுது அப்படியே வருவார்களா? என்று கேட்டால் கிடையாது. பேனா மை அல்லது ஏதாவது ஒரு சாய கறைகளை பூசி விட்டு தான் வருவார்கள். இப்படி அவர்களை அறியாமல் துணியின் மீது பட்ட கறைகளை எளிதாக போக்குவதற்கு அதிகம் சிரமப்பட வேண்டிய அவசியம் இனி இல்லை.
நெயில் பாலிஷ் போடுவது எல்லா பெண்களுக்கும் பிடிக்கும், ஆனால் நெயில் பாலிசை குழந்தைகளிடம் கொடுத்தால் வீடெல்லாம் நெயில் பாலிஷ் ஆக்கி விடுவார்கள். துணிகளில் நெயில் பாலிஷ் பட்டு விட்டால் அதை நீக்குவதும் கடினமாக இருக்கும். இப்படிப்பட்ட கறைகளையும் போக்குவதற்கு இந்த டிப்ஸ் உதவியாக இருக்கும். கறை பட்ட இந்த இடங்களில் முதலில் கொஞ்சம் டெட்டால் தேய்த்துக் கொள்ளுங்கள். ஒரு ஐந்து நிமிடம் ஊற விட்டு விடுங்கள். அதன் மீது ஒரு மூடி வினிகரை ஊற்றி ஊறவிடுங்கள். ஐந்து நிமிடம் கழித்து ஒரு பழைய டூத் பிரஷ்சை கொண்டு லேசாக தேய்த்து கொடுத்தால் போதும், இங்க் கறை மாயமாய் மறைந்து போகும்.
பேனா மை மட்டுமல்ல ஸ்கெட்ச், கலர் போன்ற குழந்தைகள் பயன்படுத்தக் கூடிய பொருட்களால் ஏற்படும் கறைகளையும் இது எளிதாக நீக்கும். அது போல நெயில் பாலிஷ் கறை பட்டு இருந்தாலும், இதன் மூலம் எளிதாக நீக்கிவிடலாம். துணிகளில் அல்லாமல் டைல்ஸ்களில் நெயில் பாலிஷ் கறை படிந்து இருந்தால், டெட்டால் பயன்படுத்துவதற்கு பதிலாக சாவ்லான் பயன்படுத்துங்கள். லேசாக சாவ்லானை தேய்த்து ஐந்து நிமிடம் ஊற விட்டு, பின்னர் டூத் பிரஸ் கொண்டு டைல்ஸை தேய்த்தால் எளிதாக நெயில் பாலிஷ் கறையை நீக்கி விடலாம். ஆயுதங்களை பயன்படுத்தி டைல்ஸை சேதப்படுத்த வேண்டிய அவசியம் இனி இல்லை.
இதையும் படிக்கலாமே:
பூஜை பாத்திரங்கள் சுத்தம் செய்ய
பட்டுப்புடவையின் மீது படிந்துள்ள விடாப்பிடியான உணவுக் கறைகளை எளிதாக நீக்குவதற்கு கொஞ்சம் ஷாம்பூவை எடுத்து கறைப்பட்ட இடத்தின் மீது லேசாக தேய்த்துக் கொடுங்கள். ஒரு பத்து நிமிடம் அப்படியே ஊற விட்டுவிட்டு சுடு தண்ணீரில் போட்டு லேசாக தேய்த்துக் கொடுத்தால் போதும், பட்ட கறை காணாமல் போயிருக்கும். ஈரம் காய்ந்த பின்பு நன்கு உலர்த்தி அயர்ன் செய்தால் போதும், பட்டுப் புடவை பளிச்சென இருக்கும். துணி கறைகளுக்கு எலுமிச்சை, பேக்கிங் சோடா போன்றவற்றை பயன்படுத்துவதை விட இது போன்ற எளிமையான வழிமுறைகளை பயன்படுத்தினால், நீண்ட நாட்களுக்கு துணிகள் சேதம் அடையாமலும், உங்களுக்கு எளிதாக கறைகளை போக்கவும் உதவியாக இருக்கும்.