நம்முடன் இருக்கும் எதிரிகளை அழிக்க உதவும் ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி மந்திரம்

Amman-manthiram

கண்ணுக்கு தெரிந்து நமக்கு சில எதிரிகள் இருப்பார்கள் ஆனால் நம்மருகே நல்லவர்கள் போல நடித்து நமக்கும் துன்பத்தை விளைவிக்க காத்திருக்கும் சில எதிரிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களை கண்டறிவது அவ்வளவு சுலபமல்ல. ஆனால் அவர்கள் நமக்கெதிராக செய்யும் சதிகள் அனைத்துயிலும் இருந்து நம்மை காத்து ரட்சிக்கும் சக்தி அன்னை ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரியிடம் உள்ளது. அவளை வணங்கி கீழே உள்ள மந்திரம் அதை துதிப்பதன் பயனாக நம் கண்ணுக்கு தெரிந்த, தெரியாத எதிரிகள் யாவரும் நமக்கெதிராக செய்யும் செயல்கள் யாவும் தூள் தூளாக போகும்.

amman

மந்திரம்:
ஹரிஓம் பஹவதி
ஆதிபகவதி அனாதரட்சகி, அகிலத்தையாண்ட
ப்ரமாண்ட நாயகியே,
ஆனந்த தாண்டவி
ரேணுகா பரமேஸ்வரி தாயே, ஆதிமுதல்வியே ஹரியையும் அயனையும் படைத்த அமுதவல்லித்தாயே,
அண்டசராசரம் யாவும் துதிக்கும் ரேணுகா பரமேஸ்வரித்தாயே, பண்ணிருகரனையும் பாசாங்குசதாசனையும்,
ஈன்ற ரேணுகா பரமேஸ்வரித்தாயே,
ஓம் ஐயும் கிலியும் சவ்வும் ரிவ்வும் மவ்வும், ஓங்காரி றீங்காரி, வாவா வாவா, வந்தருள் புரிகுவாய் ஸ்வாஹ.

இதையும் படிக்கலாமே:
உயிரை காக்கும் சக்தி பெற்ற மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம்

ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று இந்த மந்திரத்தை 108 முறை ஜபிக்க ஆரமித்து பின் ஒரு மண்டல காலம் வரை இதை தினமும் ஜபிப்பது நல்லது. இந்த மந்திரத்தை ஜபிக்க துவங்கும் முன்பு பிள்ளையாரை வணங்கிவிட்டு ஜெபிக்கவும்.