உயிரை காக்கும் சக்தி பெற்ற மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம்

Sivan-Manthiram (1)

மரணம் என்பது எல்லோருக்கும் நிகழக்கூடிய ஒன்று தான். ஆனால் சிலர் விபத்துகாரணமாகவோ அல்லது நோய் காரணமாகவோ விதி முடிவதற்கு முன்பே மரணம் அடைவதுண்டு. இதை துர் மரணம் என்பர். முக்கண்ணனை எவர் ஒருவர் வழிபடுகிறாரோ அவருக்கு துர் மரணம் நேராது. சிவனுக்குரிய மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஒருவர் முறையாக ஜபித்தால் விதிப்படி அவர்கள் வாழ வேண்டிய முழுமையான வாழ்வை வாழ்ந்த பிறகே மரணம் அவர்களை அண்டும். அதுவரை எக்காரணம் கொண்டும் மரணம் அண்டாது. மரணப்படுக்கையில் இருப்பவர்களை கூட காக்கும் சக்தி பெற்றது மிருத்யுஞ்ஜய மந்திரம்.

sivan

மஹா மிருத்யுஞ் ஜய மந்திரம் :
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

பொது பொருள்:
இயக்கையாகவே நறுமணம் கொண்டவரும், அடியவர்களுக்கு கருணையை ஊட்டி வளர்பவருமான முக்கண் கொண்ட எம் பெருமானே உங்களை பூஜித்து வழிபடுகிறோம். காம்பில் இருந்து வெள்ளரிப்பழம் எப்படி விடுபடுகிறதோ அது போல மரணத்தின் பிடியில் இருந்து என்னை விடுவித்து சன்மார்க்க நெறியில் இருந்து பிறழாமல் வாழ்ந்திட அருள்பாலிக்க வேண்டுகிறேன்.

இதையும் படிக்கலாமே:
திருமால் மற்றும் மகாலட்சுமியின் அருளை ஒருசேர பெற உதவும் போற்றி

ரிக் வேதத்திலும், யஜூர் வேதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இந்த மகா மிருத்யுஞ் ஜய மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் மூலம் மரண பயம் நீங்கும், ஆயுள் அதிகரிக்கும், இறை வழிபாட்டில் நாட்டம் ஏற்படும், தீராத நோய் தீரும்.

சிவன் மந்திரங்கள் மற்றும் அனைத்து விதமான தமிழ் மந்திரங்கள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்

English Overview:
Here we have Mrityunjaya mantra in Tamil. This can also be called as Mrityunjaya manthiram in Tamil. This called life-saving mantra. By chanting thing mantra one can get away from bad illness too. This is Lord Shiva mantra in Tamil.