ஹோட்டல் ஸ்டைல் சுவையான பாஸ்தா ரெசிபி நீங்களும் இவ்வாறு ஒருமுறை செய்து சுவைத்துப் பாருங்கள்

macroni-pasta2
- Advertisement -

எப்பொழுதும் செய்யும் இட்லி, தோசையை தவிர்த்து சற்று வித்யாசமாக உணவு வகைகள் செய்து கொடுத்தால் வீட்டில் உள்ளவர்களும் குழந்தைகளும் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். இவ்வாறு இட்லி தோசைக்கு மாறாக நாம் செய்வது சப்பாத்தி, பூரி, பொங்கல், இடியாப்பம், உப்புமா போன்ற உணவு வகைகள் தான். ஆனால் இப்பொழுதெல்லாம் குழந்தைகள் அதிகமாக விரும்புவது ஹோட்டல் சுவையில் இருக்கும் உணவுகளும் மேற்கத்திய உணவுகளையும் தான். இந்த உணவுகளை எளிமையாக வீட்டிலேயே செய்து கொள்ளலாம். இவற்றை செய்வதற்கு நேரமும் குறைவாக தான் செலவாகும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். வாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு சுவையான பாஸ்த்தா ரெசிபியை எவ்வாறு செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

idli-sambar3

தேவையான பொருட்கள்:
பாஸ்த்தா – ஒரு கப், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, சிறிய கேரட் – 1, குடைமிளகாய் – 1, இஞ்சி பூண்டு விழுது – அரை ஸ்பூன், வரமிளகாய் தூள் – அரை ஸ்பூன், பச்சை மிளகாய் – 1, சில்லி சாஸ் – அரை ஸ்பூன், சோயா சாஸ் – ஒரு ஸ்பூன், தக்காளி சாஸ் – 2 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன் எண்ணெய் – 5 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் அடுப்பை பற்ற வைத்து, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அரை ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதில் ஒரு கப் பாஸ்த்தா சேர்த்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். பிறகு அடுப்பை அனைத்து தண்ணீரை வடிகட்டி, பாஸ்தாவை ஒரு கிண்ணத்தில் மாற்றி கொண்டு, அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து வைக்க வேண்டும்.

pasta

பிறகு ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து மீதமுள்ள எண்ணெயை ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு தக்காளி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி இவற்றுடன் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் சிறிய கேரட் மற்றும் குடை மிளகாயையும் நறுக்கிக் கொண்டு இவற்றுடன் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அரை ஸ்பூன் மிளகாய்த்தூள், மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும். பின்னர் அரை ஸ்பூன் சில்லி சாஸ், ஒரு ஸ்பூன் சோயா சாஸ், 2 ஸ்பூன் தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக கலந்து விட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

macroni-pasta1

பிறகு வேகவைத்த பாஸ்த்தாவை இவற்றுடன் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, இறுதியாக சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அனைத்து விட வேண்டும். அவ்வளவுதான் ஹோட்டல் சுவையில் அசத்தலான பாஸ்தா வீட்டிலேயே தயாராகிவிட்டது. இதனை பரிமாறி கொடுத்த வீட்டில் உள்ள அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.

- Advertisement -