எவ்வளவு கருப்பாக இருக்கும் முகத்தை கூட வெறும் 5 நாட்களில், பளிச் பளிச் பளிங்கு கற்கள் போல ஜொலிக்க வைத்துவிடலாம். அதுவும் சமையலறையில் இருக்கும் இந்த 4 பொருட்களை வைத்தே!

face13

உங்களுடைய முகம் கருப்பாக இருந்தாலும் சரி, மாநிறமாக இருந்தாலும் சரி, வெள்ளையாக இருந்தாலும் சரி, அந்த முகத்தில் ஒரு கலையும் புன்னகையும் இல்லை என்றால் நிச்சயமாக அழகு என்பது முழுமையாக இருக்காது. பெண்களாக இருந்தாலும் ஆண்களாக இருந்தாலும், கருப்பாக இருந்தாலும் சிவப்பாக இருந்தாலும் முகம் எப்போதுமே புன்னகையோடு இருக்க வேண்டும். இந்த புன்னகையோடு சேர்த்து உங்களுடைய முகத்தை இன்னும் அழகாக பளிங்குக் கற்கள் போல் மாற்றி விட்டால், தன்னம்பிக்கை தானாகவே உயர தொடங்கிவிடும்.

arisimavu

முகத்தை பளிச் பளிச்சென்று ஜொலிக்க வைக்க சுலபமான முறையில் ஒரு குறிப்பை இன்று, இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஆண்களும் இந்த குறிப்பை பின்பற்றலாம். சமையலறையில் இருக்கக்கூடிய அரிசி மாவு, கோதுமை மாவு, தயிர், உருளைக்கிழங்கு, இந்த 4 பொருள் மட்டுமே போதும். இதை எப்படி முகத்திற்கு பயன்படுத்துவது?

முதலில் உருளைக்கிழங்கை நன்றாக துருவி பிழிந்து சாறு மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பௌலில் அரிசி மாவு 2 ஸ்பூன், கோதுமை மாவு 2 ஸ்பூன், இந்த இரண்டு மாவையும் போட்டு நன்றாக கலந்து விட்டு உருளைக்கிழங்கு சாறு 4 டேபிள்ஸ்பூன், தயிர் 4 டேபிள் ஸ்பூன் இந்த இரண்டையும் மாவில் ஊற்றி நன்றாக பேஸ்ட் போல கலக்கவும்.

Gothumai

தண்ணீர் ஊற்றி கலக்கக்கூடாது. தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் தயிரை சேர்த்து மாவை பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வாருங்கள். இதை உங்களுடைய முகம் கழுத்து பகுதிகளில் மாஸ்க் போட்டு கொள்ள வேண்டும். 15 இலிருந்து 20 நிமிடங்களுக்கு அப்படியே இந்த ஃபேஸ் பேக் உங்களுடைய முகத்தில் நன்றாக காயட்டும். அதன் பின்பு உங்களது கைகளை தண்ணீரில் தொட்டு, முகத்தை ஈரம் செய்து, லேசாக ஸ்க்ரப் செய்து 5 நிமிடங்கள் மசாஜ் செய்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும்.

ஒருமுறை இந்த ஃபேஸ் பேக்கை போட்ட உடனே, முகத்தில் நல்ல மாற்றம் தெரியும். இந்த ஃபேஸ் பேக்கை தேவைப்பட்டால் 1/2 ஸ்பூன் தேன் சேர்த்து கொள்ளலாம். உங்களுடைய வீட்டில் தேன் இல்லை என்றால் அதை தவிர்த்துக் கொள்ளலாம். இந்த பேக்கை உங்களுடைய கை கால் பகுதிகளில் போட்டு வந்தாலும் முகம் போலவே உங்களுடைய கை கால்களும் வெள்ளையாக மாறும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

face7

நிரந்தரமாக உங்களது வெள்ளை அழகை பாதுகாக்க வேண்டும் என்றால், வாரத்தில் மூன்று நாட்கள் இந்த பேக்கை உங்களுடைய முகத்தில் போட்டு வர வேண்டும். எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது. 5 லிருந்து 7 நாட்களில், உங்களுடைய சருமம் இருக்கக்கூடிய நிறத்தை தாண்டி இரண்டு மடங்கு, சருமம் வெள்ளையாவதை நிச்சயமாக உங்களால் உணரமுடியும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்.