உங்கள் வீட்டு பூச்செடிகளுக்கு அரிசி கழுவும் தண்ணியை இப்படி ஊற்றினால் கொத்துக் கொத்தாக நிறைய பூக்கள் கிடைக்கும் தெரியுமா?

ricewater-roseplant

நம் வீட்டில் நிறையவே பூச்செடிகளை வளர்க்க விரும்புவோம். அப்படி வளர்க்கும் பூச்செடிகள் பூத்துக் குலுங்க அதற்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுப்பது அவசியமாகும். ஒரு செடியில் நிறைய பூக்கள் பூப்பதற்கு நாம் வீட்டில் அரிசி கழுவ பயன்படுத்தும் தண்ணீர் நல்ல பலன்களைக் கொடுக்கும். நீங்கள் அரிசிக் கழுவ பயன்படுத்தும் முதல் தண்ணீரை எப்பொழுதும் செடிகளுக்கு பயன்படுத்தவே கூடாது. அரிசி கழுவும் தண்ணீர் வைத்து நம் வீட்டு பூச்செடிகளை எப்படி கொத்துக் கொத்தாக பூத்துக் குலுங்க செய்வது? என்பது தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ரோஜா, மல்லிகை, முல்லை, செம்பருத்தி என்று எந்த வகையான பூச்செடிகளும் செழிப்பாக பூத்துக் குலுங்க குறைந்தது 15 நாட்களுக்கு ஒரு முறையாவது நாம் அரிசி கழுவிய இந்த தண்ணீரை பயன்படுத்துவது நல்லது. அதை முறையாக நாம் எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதில் தான் ரகசியமே உள்ளது. இன்று நீங்கள் சாதம் வடிக்க அரிசியை கழுவுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் முதலில் நீங்கள் ஊற்றும் தண்ணீரில் நுண் கிருமிகள் இருக்கும் என்பதால் அதனை கீழே ஊற்றி விடுங்கள்.

அடுத்ததாக பயன்படுத்தும் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். மூன்றாவது முறை அலசி எடுக்கும் தண்ணீரையும் நாம் பயன்படுத்தலாம். இந்த தண்ணீரை சுமார் 15 மணி நேரமாவது நன்கு புளிக்க விட வேண்டும். அப்படி புளிக்க விடும் பொழுது அதில் நுண்ணுயிர்கள் பெருகும். அதனுடன் சம அளவிற்கு தண்ணீரைச் சேர்த்துக் கொள்ளுங்கள். அதாவது ஒரு பங்கு அரிசி கழுவிய தண்ணீருடன், சாதாரண தண்ணீர் ஒரு பங்கு சேர்த்து கொள்ள வேண்டும்.

rice-wash-water

இவற்றுடன் காய்ச்சாத பால் இருந்தால் ஊற்றிக் கொள்ளலாம். கால் டம்ளர் அளவிற்கு காய்ச்சாத பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்த சத்து மிகுந்த தண்ணீரை உங்களுடைய பூச்செடிகளுக்கு வேர் பகுதிகளில் ஊற்ற நல்ல செழிப்பான இலைகளும், தண்டுகளும் துளிர்த்து பூக்கள் பூக்கச் செய்யும். இதில் நிறைய பூக்களும் கொத்துக் கொத்தாக பூக்கத் துவங்கும். வேர் பகுதிகளில் மட்டுமல்லாமல் இலைகள், பூக்கள் என்று செடி முழுவதுமே ஸ்பிரே செய்ய வேண்டும்.

- Advertisement -

இப்படி செய்யும் பொழுது இலைகளில் இருக்கும் நுண் புழுக்கள் மற்றும் பூச்சிகளும் நீங்கிவிடும். இதனால் செடியில் இலைகளின் ஆரோக்கியம் மேம்படும். எந்த வகையான பூச்செடிகளுக்கும் இதனை பயன்படுத்தலாம். அரிசி கழுவிய தண்ணீருடன் பால் சேர்ப்பதால் கட்டாயம் நிறைய தண்ணீர் சேர்க்க வேண்டும். இல்லையென்றால் எறும்புகள் வர ஆரம்பித்து விடும். எறும்பு தொல்லை அதிகம் இருக்கும் உங்களுடைய பூச்செடிகளுக்கு வேப்ப எண்ணெய் சிறிதளவு தெளித்து விட்டால் இலை கருகல், இலைச் சுருங்கள் மற்றும் பூச்சி தொல்லைகள், எறும்புகள் நீங்கும்.

watering-plant

அரிசி கழுவிய தண்ணீர் புளிப்பதற்கு முன்பே அதனை செடிகளுக்கு பயன்படுத்துவதில் அவ்வளவாக பலன்கள் இருக்காது எனவே நன்கு புளித்த பின் பயன்படுத்துவது மிகவும் நல்லது. மேலும் இரண்டிலிருந்து மூன்று நாட்கள் வரை அரிசி கழுவிய தண்ணீரை நாம் வைத்து பயன்படுத்தலாம். ஆனால் அதில் பால் சேர்த்து விட்டால் உடனே பயன்படுத்தி விட வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
கழுத்தில் இருக்கும் அடர் கருப்பு நிறம் நீங்க இதை விட சுலபமான குறிப்பு வேறு எதுவும் இருக்க முடியாது? ரெமிடியை பயன்படுத்திய முதல் நாளே நல்ல வித்தியாசம் தெரியும்.

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.