என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக பல ஃபேஸ் க்ரீம்களை நம் முகத்தில் தடவி கொள்கிறோம். இதற்காக பல செலவுகளும் நாம் செய்கிறோம். அதனால் மாற்றங்கள் ஏற்பட்டாலும் அது எவ்வளவு நாள் வரை இருக்கும் என்பது நமக்கு தெரியாது. வீட்டில் இருக்கும் அந்த ஒரு தண்ணீரை நம் முகத்தில் தடவினோம் என்றால் நம் முகம் என்றும் இளமையாக இருக்கும் என்று கூறினால் நம்புவீர்களா? ஆம். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் எந்த தண்ணீரை முகத்தில் தடவினால் முகம் என்றும் இளமையாகவும் சுருக்கம் இன்றியும் இருக்கும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.
அனைவருக்கும் மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த நீரை நம் முகத்தில் தடவினால் தளர்ந்த முகம் இறுகி முகச்சுருக்கம் என்பது மறையும். முகச்சுருக்கம் இல்லாமல் இருந்தால் முகம் என்றும் இளமையாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் முகம் பிரகாசத்துடன் தென்படும். பளிங்கு போன்ற முகத்தை பெறலாம். இவ்வளவு அற்புத குணம் நிறைந்த நீர் தான் சாதம் வடித்த நீர்.
இதை நாம் சாதம் வடித்த கஞ்சி என்று கூறுவோம். அனைவரின் இல்லங்களிலும் தினமும் சாதம் செய்வோம். அவ்வாறு சாதத்தை வடிக்கும் பொழுது பெறக்கூடிய தண்ணீரை தான் சாதம் வடித்த கஞ்சி என்று கூறுகிறோம். குக்கரில் சாதம் செய்பவர்கள், சிறிதளவு அரிசியை தண்ணீர் ஊற்றி 15 இல் இருந்து 20 நிமிடம் வரை நன்றாக கொதிக்க வைத்து ஆறிய பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமான குறிப்பு சாதத்தில் உப்பு சேர்க்க கூடாது.
இப்பொழுது சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் அரை கப் எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும். பிறகு 25 மிலி அளவிற்கு பால் ஊற்ற வேண்டும். இந்த பால் காய்ச்சிய பாலாகவும் இருக்கலாம். காய்ச்சாத பாலாகவும் இருக்கலாம். முடிந்த அளவிற்கு பசும்பாலை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டையும் நன்றாக கலந்து விட்டு அடுப்பில் எடுத்து வைத்து கிண்ட வேண்டும்.
இந்த தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்த பிறகு அதில் 2 ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவை சேர்த்து கிண்ட வேண்டும். அரிசி மாவு சேர்க்கும் பொழுது கட்டி விழுகாத அளவிற்கு நன்றாக கிண்ட வேண்டும். ஐந்து நிமிடம் நன்றாக கிண்டிய பிறகு அதை அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். இதில் இரண்டு விட்டமின் இ கேப்ஸ்யூல் ஆயிலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது நன்றாக கிண்டிவிட்டு ஒரு வடிகட்டியை பயன்படுத்தி நன்றாக வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். வடிகட்டிய இந்த நீரை நாம் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை:
இரவு படுக்க செல்வதற்கு முன் முகத்தை நன்றாக சோப்பு அல்லது ஃபேஸ் வாஷ் போட்டு கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு ஈரம் இல்லாமல் ஒரு துண்டை வைத்து துடைத்துவிட்டு இந்த தண்ணீரை முகத்தில் தடவி ஒரு நிமிடம் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு அப்படியே விட்டு விடுங்கள். சிறிது நேரத்தில் முகத்தில் ஒருவித இறுக்கம் தென்படும். அப்பொழுது சிறிது நீரை முகத்தில் தெளித்து மெதுவாக மசாஜ் செய்து கழுவி விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: இந்த ஒரு ஐடியா மட்டும் உங்களுக்கு தெரிந்தால் போதும். எந்த ஒரு சைட் எஃபெக்ட்டும் இல்லாம வெள்ளை வெள்ளையா இருக்கும் உங்க தலை முடியை கருப்பா மாத்திடலாம்.
இவ்வாறு நாம் தினமும் இரவு படுக்க செல்வதற்கு முன் செய்து விட்டு படுத்தால் நம் முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்களும், தளர்வுகளும் மறைந்து முகம் இளமையாகவும், அதேசமயம் பிரகாசமாகவும் தென்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.