இந்த ஒரு ஐடியா மட்டும் உங்களுக்கு தெரிந்தால் போதும். எந்த ஒரு சைட் எஃபெக்ட்டும் இல்லாம வெள்ளை வெள்ளையா இருக்கும் உங்க தலை முடியை கருப்பா மாத்திடலாம்.

white-hair
- Advertisement -

வெள்ளை முடி ஆங்காங்கே ஒவ்வொன்றாக எட்டி பார்க்கும்போதே நம்முடைய மனதில் ஒரு பயம் வந்துவிடும். அடடா நம்முடைய அழகு குறையப்போகிறது. நமக்கு வயதான தோற்றம் தெரியப்போகிறது என்ற ஒரு மன அழுத்தம் பொதுவாகவே நமக்குள் வந்துவிடும். இந்த நரை முடிகளை எல்லாம் கருப்பாக மாற்றுவதற்கு செயற்கை முறையில் எவ்வளவோ வழிகள் உள்ளது. அந்த வழிகள் எல்லாம் நம்முடைய வெள்ளை முடியை சீக்கிரம் கருப்பாக மாற்றும். ஆனால், அதே சமயம் கருப்பாக இருக்கும் முடியையும் சீக்கிரம் வெள்ளையாக மாறிவிடும்.

ஆகவே செயற்கையான ஹேர் டை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை அந்த செயற்கையான ஹேர் டை தவிர்த்து விடுங்கள். இயற்கையான முறையில் வெள்ளையாக இருக்கும் உங்கள் தலைமுடியை எப்படி கருப்பாக மாற்றுவது. ஒரு அழகு குறிப்பு இதோ உங்களுக்காக இந்த பதிவில்.

- Advertisement -

இயற்கையான முறையில் வெள்ளை முடியை கருப்பாக மாற்ற அழகு குறிப்பு:
இதற்கு நமக்கு முதலில் ஒரு பீட்ரூட் தேவை. அதை தோல் சீவி நன்றாக துருவி விடுங்கள். அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, துருவிய பீட்ரூட் மூழ்கும் அளவுக்கு தண்ணீரை ஊற்றி கொதிக்க வையுங்கள். அந்த தண்ணீர் கொதிக்கும் போது அதில் 5 லிருந்து 6 கிராம்புகளையும் சேர்த்து போட்டு கொதிக்க வையுங்கள். பீட்ரூட் சாறு முழுவதும் அந்த தண்ணீரில் இறங்கியவுடன் அடுப்பை அணைத்து இதை ஆற வைத்து, வடிகட்டி சிவப்பு நிற தண்ணீரை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு இரும்பு கடாயில் தேவையான அளவு ஹென்னா பொடியை போட்டுக்கோங்க. மருதாணி பவுடர் கடைகளில் விற்கிறது அல்லவா அதை, அந்த இரும்பு கடாயில் போட்டு, இந்த பீட்ரூட் தண்ணீரை அதில் ஊற்றி கட்டிகள் இல்லாமல் கலந்து விட வேண்டும். இதை எடுத்து தலையில் அப்ளை செய்யும் அளவுக்கு ஹேர் பேக் பதத்தில் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். முந்தைய நாள் இரவே இதை தயார் செய்து இரும்பு கடாயில் வச்சிருங்க. மறுநாள் காலை இது நிறம் மாறி வந்திருக்கும். அதை எடுத்து தலையில் திக்காக அப்ளை செய்து கொள்ள வேண்டியதுதான்.

- Advertisement -

வெள்ளை முடி இருக்கும் இடத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்து இந்த பேக்கை அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து விட்டால் சூப்பராக வெள்ளை நிற முடி, கருப்பாக மாறிவிடும். மாதத்தில் இரண்டு நாட்கள் இந்த ஹேர் பேக்கை தொடர்ந்து போட்டு வரவும். சில பேருக்கு ஹென்னா பவுடர் போட்டால் முடி ட்ரை ஆகும்படி தெரியும்.

இதையும் படிக்கலாமே: கட்டுக்கடங்காத கருகருவென்ற அடர்ந்த நீளமான கருங்கூந்தலை பெற ஆளி விதையை இப்படி பயன்படுத்தினாலே போதும். இந்த எளிமையான குறிப்பு மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

ஆகையால் தலையில் நிறைய எண்ணெய் வைத்துவிட்டு, அதன் பின்பு இந்த பேக்கை போட்டுக்கோங்க. முடி டிரை ஆவது போல இருந்தால் முடியை சில்கியாக மாற்றுவதற்கு தேங்காய் பால், ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய், போன்ற பொருட்களை தலைமுடிக்கு அடிக்கடி சேர்த்துவர முடி டிரையாகாமல் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அழகு குறிப்பு பிடித்திருந்தால் முயற்சி செய்து பார்க்கவும்.

- Advertisement -