- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்அட்டகாசமான சுவையில் இருக்கும் இந்த பன்னீர் பட்டர் பாயாசத்தை ஒரு முறை செய்து உங்கள் குழந்தைகளுக்கு...

அட்டகாசமான சுவையில் இருக்கும் இந்த பன்னீர் பட்டர் பாயாசத்தை ஒரு முறை செய்து உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள். இதனை மீண்டும் எப்பொழுது செய்வீர்கள் என்று உங்களைத் தொல்லை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.

- Advertisement -

அம்மாக்கள் எப்பொழுதும் குழந்தைகளுக்கு பிடித்த உணவை சமைத்து கொடுப்பதிலேயே ஆர்வமாக இருப்பார்கள். அதேசமயம் அந்த உணவு குழந்தைகளின் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருப்பார்கள். இப்பொழுதெல்லாம் உணவுகளில் உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துகள் போதிய அளவில் கிடைப்பதில்லை. எனவே நாம் கொடுக்க வேண்டிய உணவுகள் அனைத்தையும் குழந்தைகளுக்கு பார்த்து பார்த்து கொடுக்க வேண்டியதாக இருக்கிறது. இவ்வாறு குழந்தைகளின் வளர்ச்சிக்கு பெருமளவில் துணை புரியும் பன்னீரை வைத்து செய்யக்கூடிய இனிப்பை எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

children-snacks

தேவையான பொருட்கள்:
பன்னீர் – 200 கிராம், பால் – 300ml, சக்கரை – 5 ஸ்பூன், முந்திரி – 10, ஏலக்காய்த் தூள் – அரை ஸ்பூன், எண்ணெய் – 200 கிராம்.

- Advertisement -

செய்முறை:
முதலில் 200 கிராம் பன்னீரை நான்கு பாதியாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் இரண்டு பாதியை மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும். மீதமிருக்கும் இரண்டு பாதியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

panner

பின்னர் அடுப்பின் மீது கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள பன்னீரை எண்ணெயில் சேர்த்து நன்றாக சிவந்து வருமாறு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதன் பின் ஒரு பாத்திரத்தில் 300ml பாலை ஊற்றி அடுப்பின் மீது வைத்து காய்ச்சவேண்டும். பாலில் பத்து முந்திரி மற்றும் அரை ஸ்பூன் ஏலக்காய் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். பால் நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் ஃபேஸ்ட் பதத்திற்கு அரைத்து வைத்துள்ள பன்னீரை இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

milk

அடுப்பை சிம்மில் வைத்துக் கொண்டு பாலை கலந்து கொண்டே இருக்க வேண்டும். சிறிது நேரத்திற்குப் பிறகு பொன்னிறமாக பொரித்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை இவற்றுடன் சேர்த்து கலந்து விடவேண்டும். ஐந்திலிருந்து ஏழு நிமிடங்களுக்கு அடுப்பை சிம்மில் வைத்து இந்த கலவையை நன்றாக கொதிக்க விட வேண்டும்.

பின்னர் 5 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு, அதன்பிறகு இரண்டு ஸ்பூன் பட்டர் சேர்த்து நன்றாக கலந்து கொண்டு சிறிது நேரம் இவை அனைத்தும் சேர்ந்து ஒன்றாக கொதித்தவுடன் அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

payasam2

அவ்வளவுதான் சுவையான ஹெல்தியான பன்னீர் பட்டர் பாயாசம் தயாராகிவிட்டது. இதனை கண்ணாடி குடுவையில் பரிமாறி வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுத்து பாருங்கள். இதன் அட்டகாசமான சுவையை பிடிக்காதவர் என்று எவரும் இருக்க மாட்டார்கள். அதிலும் வீட்டில் உள்ள குட்டி குட்டி குழந்தைகளுக்கு இதன் சுவை மிகவும் விருப்பமாகவே இருக்கும்.

சற்று முன்