எனது வேகத்திற்கும் ஆட்டத்தின் திருப்புமுனைக்கும் காரணம் இந்த இந்திய வீரர் தான் – ஆஸி ஆட்டநாயகன் வீடியோ

richard

இன்று (12-01-2019) சிட்னியில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி. இந்த வெற்றியின் மூலம் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரை (1-0) என்ற கணக்கில் வெற்றியுடன் துவங்கி இருக்கிறது ஆஸ்திரேலிய அணி.

lose 2

இந்தப்போட்டியில் இந்திய அணியின் சார்பாக துவக்க வீரரான ரோஹித் சர்மா அதிகபட்சமாக 133 ரன்களை அடித்தார். தோனி 51 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹாண்ட்ஸ்கோம்ப் 73 ரன்களை அடித்தார். ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ரிச்சர்ட்ஸன் சிறப்பாக பந்துவீசி 4 விக்கட்டுகளை சாய்த்தார்.

அவரே ஆட்டநாயகன் விருதினையும் பெற்றார். போட்டி முடிந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் : எனது இந்த சிறப்பான பந்து வீச்சிற்கும், ஆட்டத்தின் திருப்புமுனைக்கும் காரணம் கோலி தான் என்று குறிப்பிட்டார். மேலும், கோலியின் விக்கெட்டினை வீழ்த்தியதை என்னால் என்றும் மறக்க முடியாது. நான் பந்தை அவருக்கு உள்புறமாக வீச நினைத்தேன்.

ஆனால், பந்து சற்று விலகி சென்றது இருப்பினும் அந்த பந்தில் அவரது விக்கெட் கிடைத்தது மகிழ்ச்சி. மேலும், ஒட்டுமொத்தமாக அணி வெற்றி பெற்றதாலும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று தெரிவித்தார். மேலும்,இந்த வெற்றி பயணத்தினை தொடர விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

அம்பயரின் தவறான முடிவினால் விக்கெட்டை இழந்த தோனி. கோபத்துடன் அம்பயரை பார்த்தபடி வெளியேறினார் – வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்