அம்பயரின் தவறான முடிவினால் விக்கெட்டை இழந்த தோனி. கோபத்துடன் அம்பயரை பார்த்தபடி வெளியேறினார் – வீடியோ

MS

ந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று சிட்னி நகரில் துவங்கிய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 288 பேட்டிங் குவித்தது. இதனால், இந்திய அணிக்கு 289 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது.இதனை தொடர்ந்து இந்திய அணி விளையாட துவங்கியது.

lose 2

அடுத்து ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 254 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய அணி 34ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தில் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தில் நடுவரிசையில் களமிறங்கிய தோனி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்க ரோஹித் உடன் இணைந்து பொறுமையாக விளையாடினார். 96 பந்துகளை சந்தித்த அவர் 51 ரன்களில் ஆட்டமிழந்தார்.

எல்.பி.முறையில் வெளியேறிய அவரது அவுட்டானது இப்போது தவறான முடிவு என்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் அவுட் ஆன பந்து லெக் ஸ்டம்பிற்கு பக்கத்தில் குத்தியுள்ளது. ரிவியூ இந்திய அணிக்கு அப்போது கையில் இல்லை. ஒருவேளை ரிவியூ இருந்திருந்தால் நிச்சயம் அது அவுட் இல்லை என்று தெரிய வந்திருக்கும் . இதோ அந்த வீடியோ இணைப்பு :

அவர் களத்தில் இருக்கும்வரை இந்திய அணி சற்று உயிர்ப்போடு இருந்தது என்றே கூறவேண்டும். ஏனெனில், முதலில் பொறுமையாக ஆடிய அவர்கள் பிறகு ரன்ரேட் சற்று வுயருமாறு ஆடினார்கள். ரோஹித் சிறப்பாக ஆடி பந்துகளைவிட அதிக ரன்கள் அடித்தார். தோனியும் அந்த அவுட் இல்லாமல் இருந்திருந்தால் அவரும் இறுதி நேரத்தில் அதிரடியாக ஆடக்கூடியவர் என்பதால் அணி வெற்றியினை எட்டி இருக்கும் என்று நம்பலாம்.

இதையும் படிக்கலாமே :

முதல் போட்டியில் தோல்வி. ரசிகர்கள் ஏமாற்றம் தோல்விக்கு காரணம் இதுதான்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்