15 நிமிடத்தில் மொறு மொறுன்னு சூப்பரான ரிப்பன் பகோடா இப்படி செஞ்சு பாருங்க. கடையில் வாங்குவதைவிட இதோட சுவை சூப்பராக இருக்கும்.

ribban-pakoda2
- Advertisement -

ரிப்பன் பக்கோடா என்றால் அதை பெரும்பாலும் நாம் கடைகளில் தான் வாங்குவோம். ஆனால் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சூப்பரான ரிப்பன் பக்கோடா எப்படி செய்வது. அதுவும் வெறும் 15 நிமிடத்தில் எப்படி செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குழந்தைகளுக்கு இதை ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்யலாம். திடீர் விருந்தாளிகள் வந்து விட்டார்கள், வீட்டில் கொடுப்பதற்கு ஸ்னாக்ஸ் இல்லை என்றால், டீ யுடன் கொடுக்க 15 நிமிடத்தில் ஸ்னாக்ஸ் ரெடி. சரி வாங்க ரெசிபியை பார்க்கலாம்.

ribban-pakoda1

உங்க வீட்டில் இருக்கும் சிறிய அளவு டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தம்ளரில் மாவை அளந்து கொள்ளலாம். அந்த டம்பளர் 200ml அளவு இருந்தால் சரியாக இருக்கும். அரிசி மாவு – 1 டம்ளர், பொட்டுக்கடலை மாவு – 1/2 டம்ளர், தனி மிளகாய்த் தூள் – 1/2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு, தோல் உரித்த பூண்டு பல் – 5. இந்தப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அரிசி மாவு கடையிலிருந்து வாங்கிய மாவாக இருந்தாலும் சரிதான். ஆனால் அந்த மாவை சலித்து எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் பொட்டுக்கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக பொடித்து அதையும் சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். மாவில் குருணை இருந்தால் எண்ணெயில் வெடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

ribban-pakoda

அடுத்தபடியாக மிக்ஸி ஜாரில், எடுத்து வைத்திருக்கும் உப்பையும், பூண்டுப் பல்லைப் போட்டு அரைக்கவேண்டும். இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து அரைத்தால் பூண்டினை நைஸாக அரைக்க முடியாது. ஆகவே, இந்த இரண்டு பொருட்களோடு, நான்கு ஸ்பூன் அரிசி மாவையும் போட்டு அரைக்கவேண்டும். அரிசி மாவோடு பூண்டு உப்பு சேர்த்து மைய அரைத்து இருக்கும் இந்த பொடியை மாவோடு சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு அகலமான பௌலில் அரிசி மாவு, கடலை மாவு, அரைத்த பூண்டு, மிளகாய்தூள் எல்லா பொருட்களையும் சேர்த்து முதலில் நன்றாக கலந்துவிட வேண்டும். அதன் பின்பு சுட சுட எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் அளவு இந்த மாவில் ஊற்றி நன்றாக பிசைய வேண்டும். சூடான எண்ணெய் இந்த மாவில் எல்லா இடங்களிலும் நிச்சயம் பட வேண்டும். அப்போதுதான் ரிப்பன் பக்கோடா மொறு மொறுவென்று வரும். அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை தெளித்து இந்த மாவை கையில் ஒட்டாத பதத்திற்கு சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ள வேண்டும்.

ribban-pakoda3

அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் சூடு செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு முறுக்கு குழாயில் ரிப்பன் பக்கோடா அச்சை போட்டு முறுக்கு குழாயில் உள்ளே எண்ணெய்யை தடவி, பிசைந்து வைத்திருக்கும் இந்த மாவை ஒரு பாகம் எடுத்து போட்டு அப்படியே எண்ணெயில் பிழிய வேண்டும்.

ribban-pakoda4

எண்ணெயில் பிழிந்த மாவு சிடசிடப்பு அடங்கி வெந்து மொறுமொறுவென வந்தவுடன் எடுத்து பரிமாறினால் சூப்பரான ரிப்பன் பக்கோடா தயார். நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு இந்த ரிப்பன் பக்கோடாவின் சுவை சூப்பராக இருக்கும். மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -