ரிஷப லக்னத்தார்களுக்கு அதிர்ஷ்டமான வாழ்க்கை ஏற்பட இதை செய்ய வேண்டும்

rishaba-lagnam
- Advertisement -

ஜாதக கட்டத்தில் மேஷ ராசிக்கு அடுத்தபடியாக வருகிற ராசி ரிஷப ராசியாகும். ரிஷபம் என்பது எருதை குறிக்கும் ஒரு சொல்லாகும். மற்ற எந்த ராசிக்காரர்களையும் விட இளமையிலிருந்தே சுகபோகங்களை அனுபவிக்கும் வாய்ப்பு ரிஷப ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. இந்த ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு, அவர்களின் ஜாதகத்தில் ஒன்பதாவது வீட்டின் அதிபதி மூலம் யோகங்கள் ஏற்படுவதற்கான வழிகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

astro wheel 1

12 ராசிகளில் இரண்டாவதாக வரும் ராசி ரிஷப ராசி ஆகும். இந்த ராசியின் அதிபதியாக நவக்கிரகங்களில் சுகாதிபதியான சுக்கிர பகவான் இருக்கிறார். ரிஷப ராசிக்கு கன்னி, மகரம், மீனம், கடகம் ஆகிய ராசிகள் நட்பு ராசிகளாக இருக்கின்றன. இதில் ரிஷப ராசிக்கு நட்பு ராசியாக இருக்கும் மகர ராசி ரிஷப ராசிக்கு ஒன்பதாவது வீடாக அமைகிறது.

- Advertisement -

மகர ராசி என்பது சனிபகவானுக்குரிய ராசியாக இருக்கிறது. ரிஷப ராசி மற்றும் லக்னம் ஆகியவற்றிற்கு அதிபதியான சுக்கிரன், சனி பகவானுக்கு சமம் மற்றும் நட்பு கிரகமாக இருப்பதால், ரிஷப லக்னதார்களுக்கு சனி பகவான் நல்ல அதிர்ஷ்டங்களையும், யோகங்களையும் ஏற்படுத்துவார். ஜாதகத்தில் பிற கிரகங்களின் பாதகமான திசாபுத்தி காலங்களிலோ அல்லது தீய பார்வை பெறுவதாலும் சில சமயங்களில் ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு யோகங்கள் ஏற்படுவதில் தடைகள் உருவாகலாம். அப்படிப்பட்ட சமயங்களில் கீழ்க்கண்ட பரிகாரங்களை செய்வதன் மூலம் ரிஷப லக்னகாரர்கள் அதிர்ஷ்டங்கள் மிகுந்த வாழ்க்கையை பெறலாம்.

sukran

ரிஷப லக்னகாரர்கள் யோகங்கள் பெற வேதம் அறிந்த பிராமணருக்கு சனி பகவானின் ஆதிக்கம் மிகுந்த சிறிய அளவிலான நீலக்கல் ரத்தினத்தை தானம் வழங்கலாம். கோயில்கள் கட்டுமானத்திற்கு கருங்கல், மண், மணல் போன்றவற்றை தானம் வழங்கலாம். கட்டிடம் கட்டும் தொழிலாளிகள் மற்றும் இதர கடைநிலை ஊழியர் களுக்கு இரும்பினால் செய்யப்பட்ட பொருட்களை தானம் வழங்க வேண்டும். தினந்தோறும் தெரு நாய்களுக்கு உணவளிப்பதும் உங்களுக்கு ஜாதகத்தில் ஒன்பதாவது வீட்டின் அதிபதியால் யோகங்கள், அதிர்ஷ்டங்கள் ஏற்பாடுவதற்கு வழிவகை செய்யும் சிறந்த பரிகாரம் ஆகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
12 ராசியினருக்குமான சனி வக்கிர சஞ்சார பலன்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Rishaba lagna yogam in Tamil. It is also called as 12 lagnas in Tamil or Jodhidam yogam in Tamil or Sukra pariharam in Tamil or Makara rasi in Tamil.

- Advertisement -