ரிஷப ராசி 2020 புத்தாண்டு பலன்கள்

2020 new year rasi palan Rishabam
2020 new year rasi palan Rishabam

ரிஷப ராசி புத்தாண்டு பலன்கள்

ராஜயோகத்தைக் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, இந்தப் புத்தாண்டு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப் போகின்றது. கடந்த மூன்று வருடங்களாக அஷ்டம சனியின் மூலம் கடுமையான பலன்களை சந்தித்திருப்பீர்கள். கடன் பிரச்சனை, மன வேதனை, உடல் ஆரோக்கியமின்மை, மனவேதனை இப்படி எல்லாவிதத்திலும் கஷ்டம் உங்களை வாட்டி வதைத்திருக்கும். அதற்கான விடிவுகாலம் பிறந்து விட்டது.

Taurus zodiac sign

இனி வரப்போகும் காலங்களில் உங்களின் வாழ்க்கை பாதை முன்னேற்றத்தை நோக்கி தொடரப் போகின்றது.  உங்கள் தொழில் முன்னேற்றம் அடையும். வேலைக்கு செல்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் வருமானம் சீராக இருக்கும். வீடு வாகனம் மனை வாங்கும் யோகம் உண்டு. வீட்டில் சுப விசேஷங்கள் நடைபெற வாய்ப்புகள் இருப்பதால் உறவினர்களின் வருகை அதிகரிக்கும். இதனால் சுப செலவு ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே சுமூகமான உறவு இருந்துவரும். உடல் நலம் சீராக இருக்கும்.

மாணவர்கள்
ரிஷபத்திற்க்கு 5ஆம் இடமான கன்னி ராசிக்கு, சனி பார்வை விலகி விட்டதால் மாணவர்கள், கல்வி கற்பதில் முன்னேற்றம் அடைவீர்கள். சோம்பல், அசதி இவையெல்லாம் தகர்த்தெறியப்பட்டு திடீர் உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுவீர்கள். மேல்படிப்பு படிப்பவர்களுக்கு கல்லூரியில் இடம் கிடைக்கும். உங்களின் முயற்சி முன்னேற்றத்தை தரும்.

astrology

- Advertisement -

திருமணம்
7ஆம் இடத்தில் இருந்த குரு சில சங்கடங்களையும், சில நன்மைகளையும் கொடுத்துக் கொண்டிருந்தார்.  ஆனால் இப்பொழுது 2020இல் 7ஆம் இடத்திலிருந்து நகர்ந்து விட்டார். ஏழாம் இடத்திற்கு சனி பார்வையும் இல்லை. உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் குரு பார்வை உள்ளதால், திருமணத் தடை இப்பொழுது நீங்கி விட்டது. திருமணத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் ஆண் பெண் இருவருக்கும் நிச்சயம் கெட்டிமேள சத்தம் கேட்கும்.

வேலைவாய்ப்பு

கடந்த இரண்டு வருடங்களாக வேலைவாய்ப்பு இல்லாமல் நீங்கள் பட்ட கஷ்டங்கள் இதோடு முடிவுக்கு வந்தது. வேலைவாய்ப்பை தேடுபவர்களுக்கு கண்டிப்பாக உத்தியோகம் கிட்டும். நீங்கள் எதிர்பார்த்த சம்பளத்தோடு, எதிர்பார்த்த பதவியுடன் வேலை நிச்சயம் அமையும். வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் உங்களின் பேச்சை இது வரை கேட்காதவர்களும் இனி கேட்டு நடப்பர். அரசு துறையில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

astrology

தொழில்

சுய தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களாக இருந்தால், உங்களுக்கு இதுவரை இருந்த தடைகள் நீங்கி உங்கள் தொழில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும். புதிதாக நண்பர்கள் வட்டம் கிடைப்பதன் மூலம் உங்களின் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். உங்கள் சாமார்த்தியத்தின் வெளிப்பாட்டை கண்டவர்கள், வியப்படைவார்கள். இடையில் சிறு சிறு ஏற்ற இறக்கங்கள் வந்து போகும். அந்த சமயத்தில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வங்கியில் கடன் வாங்க முயற்சிப்பவர்களுக்கு வங்கிக் கடன் கிடைக்கும்.

astrology

ரிஷப ராசிக்காரர்கள் கொஞ்சம் பகட்டாக வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அப்படி நினைக்காமல், அனாவசிய பேச்சுகளை குறைத்து, உங்களது உழைப்பை அதிகப்படுத்தினால் உங்களுக்கான வெற்றிகளும் நிச்சயம் அதிகமாகத் தான் கிடைக்கும். தினம்தோறும் உங்கள் தாய் தந்தையின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று நீங்கள் செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றி தான்.

இதையும் படிக்கலாமே
மேஷ ராசி 2020 புத்தாண்டு பலன்கள்

English Overview:
Rishaba rasi 2020 new year rasi palan in Tamil. Puthandu palangal 2020 Rishabam is here.