மேஷ ராசி 2020 புத்தாண்டு பலன்கள்

2020 new year rasi palan Mesham
2020 new year rasi palan Mesham

மேஷ ராசி புத்தாண்டு பலன்கள்

Aries zodiac sign

விடா முயற்சியால் வெற்றியை அடையும் மேஷ ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு சனி 10லும் குரு 9லும் இருக்கின்றார்கள்.  சனியும், குருவும் உங்களுக்கு சாதகமாக உள்ளதால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். தொட்டதெல்லாம் துலங்கும் காலம் இது. சமுதாயத்தில் பிரபலம் அடையும் வாய்ப்பு ஏற்படும். தன்னம்பிக்கை பிறந்து, தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். அரசியலில் உள்ளவர்களுக்கும், அரசு சார்ந்த பணியில் உள்ளவர்களுக்கும், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கும் இந்த ஆண்டு சிறப்பான முன்னேற்றத்தை தரும்.

தடைப்பட்ட காரியங்கள் சுமூகமாக நடந்து முடியும். கடன் பிரச்சினை தீரும்.  குரு கேதுவின் சேர்க்ககையினால் ஆன்மீகத்தில் ஈடுபடுவீர்கள். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்த கோவிலுக்கு சென்று வர வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்த நண்பர்களை சந்திப்பீர்கள். பயணங்களின் போது கவனம் கொள்வது நல்லது. உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வழக்குகளின் வழக்கறிஞர்களின் ஆலோசனைப்படி நடந்து கொள்வது நல்லது. உறவினர்களிடம் உஷாராக இருக்க வேண்டிய காலமிது.

தொழில்:

சொந்தத் தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் தாராளமாக இந்த ஆண்டில் தொடக்கத்தில் ஆரம்பிக்கலாம். எதையும் சமாளித்து தொழிலில் முன்னேற்றம் அடைய சாதகமான நேரம் இது. கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. சுக்கிரனும் புதனும் சாதகமான வீட்டில் இருப்பதால் சோர்வு நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். சொந்த வீடு, வாகனங்கள், விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

- Advertisement -

astrology

திருமணம்.

முயற்சி ஸ்தானத்தில் இருக்கும் ராகுவினால் செய்யும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி இருவருக்கும் இடையே இருந்த பிரச்சனைகள் நீங்கி நெருக்கம் ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு. பாக்கிய குரு பலனை அள்ளித் தர போகின்றார். குடும்பத்தில் தீராத பிரச்சினைகள் அனைத்தும் தீரும். சுபச் செலவு ஏற்படும். அதிகரிக்கும் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். இதற்கு முன் நீங்கள் செய்த அனாவசிய செலவினை யோசித்து வருத்தப்படுவீர்கள்.

மாணவர்களுக்கு

கடகத்தில் விழும் சனியின் பார்வையால் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவீர்கள். விடுபட்ட பட்டப் படிப்பினை முடிப்பதன் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும். கலைத்துறையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.

astro

வேலைவாய்ப்பு

அரசு சம்பந்தப்பட்ட வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.  தனியார் துறையில் வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பெண்கள் தாங்கள் விருப்பப்பட்ட வேலையில் சேருவதற்கான வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டிற்கு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு விசா கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு.

astrology

அஷ்டமத்து சனியால் கடந்த வருடம் கஷ்டங்களை அனுபவித்து இருந்தாலும் அந்த கஷ்டங்களை எல்லாம் கடந்து வரக்கூடிய நல்ல வருடம் தான் இது. மொத்தத்தில் வரப்போகும் புத்தாண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி தரக்கூடியதாக இருக்கும். விடாமுயற்சி உங்களுக்கு விஸ்வரூப வெற்றியைத் தேடித்தரும்.

English Overview:
Mesha rasi 2020 new year rasi palan in Tamil. Puthandu palangal 2020 Mesham is here.