வெலிங்டனில் டி20 போட்டிக்காக தீவிர பேட்டிங் பயிற்சி எடுத்து வரும் ரிஷப் பண்ட் – வீடியோ

pant

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை துவங்க உள்ளது. வெலிங்டனில் நாளை(06-02-19) மதியம் இந்திய நேரப்படி சரியாக 12.30 க்கு போட்டி துவங்க உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

sridhar

இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது ரிஷப் பண்ட் பேட்டிங் செய்யும் வீடியோ ஒன்றினை பி.சி.சி.ஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் பண்ட் கீப்பருக்கு பின்னால் தூக்கி அடிக்கக்கூடிய ஒரு வித்தியாசமான ஷாட் ஒன்றை ஆடுகிறார். இதோ அந்த வீடியோ இணைப்பு :

நாளைய போட்டியில் பண்ட் முன்கூட்டியே இறங்கினால் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கலாம். அவரின் அதிரடி ஆட்டம் பல ரசிகர்களை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

உலகக்கோப்பை தொடரில் 4ஆவது 6ஆவது இடத்தில் கட்டாயம் இவர்களே களமிறங்குவார்கள் – ரவி சாஸ்திரி

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்