உலககோப்பை தொடரில் எங்களது அணி அபாய மணி ஒலிக்க தயாராக உள்ளது – கெயில்

Gayle

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5 ஆவது மற்றும் போட்டி நேற்றுமுன்தினம் லூசியா நகரில் நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 28.1 ஓவர்களில் 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

Holder

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் தாமஸ் சிறப்பாக பிசந்துவீசி 5.1 ஓவர்களில் 21 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிறகு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 114 ரன்கள் என்ற இலக்கினை அனாயசமாக 12.1 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கெயில் 27 பந்துகளில் 77 ரன்கள் அடித்து நொறுக்கினார்.

இந்த போட்டிக்கு பிறகு பேட்டி அளித்த கெயில் : இந்த தொடரில் எங்களது அணி முழுவதும் வீரர்கள் சிறப்பாக தங்களது பங்களிப்பை அளித்தனர். மேலும், கடந்த சில வருடங்களாக சோபிக்க தவறிய நாங்கள் இந்த ஆண்டு ஆரம்பம் முதல் பழையபடி சிறப்பான ஆட்டத்தை தர திரும்பியுள்ளோம். தவரிசையில் கீழே இருப்பதால் மற்ற அணிகள் எங்களை குறைத்து மதிப்பிடுகிறார்கள் அதனை இந்த உலகக்கோப்பை தொடரில் தவிடுபொடி ஆக்க உள்ளோம். எங்களது அதிரடி ஆட்டத்தினை ஒரு திட்டமாக எடுத்து உலகக்கோப்பை தொடரில் அனைத்து எதிர் அணிக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்வோம் என்றும் கூறினார்.

Gayle

மேலும், இந்த உலகக்கோப்பை தொடரில் எந்த நாட்டினையும் எதிர்த்து எங்களால் ஜெயிக்க முடியும். எனவே, நாங்கள் நிச்சயம் கோப்பையை வெல்ல போராடுவோம் என்றார் கெயில் .நடந்து முடிந்த இங்கிலாந்து தொடரில் 2 சதம் மற்றும் ஒரு அரைசதம் என்று அடித்து தொடர்நாயகன் விருதினையும் இவர் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

அச்சு அசலாக பும்ராவை போன்ற ஸ்டைலுடன் பந்துவீசி அசத்தும் சிறுவன் – வைரல் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்