ரோட்டு கடை தக்காளி சட்னியும், ஆந்திரா ஸ்பெஷல் காரச் சட்னியும் 10 நிமிடத்தில் இப்படிக்கூட செய்யலாமே!

road-side-tomato-chutney-andra-kara
- Advertisement -

ரோட்டு கடைகளில் கொடுக்கும் கையேந்தி பவன் தக்காளி சட்னி செய்ய ஐந்து நிமிடம் கூட ஆகாது. பெரும்பாலான சிறிய சிறிய ஹோட்டல்கள் மற்றும் ஹாஸ்டல்களில் கூட இந்த முறையில் தான் தக்காளி சட்னியை செய்து கொடுப்பார்கள். பட்ஜெட் பார்த்து செய்யப்படும் இந்த சட்னி சுவையில் ஒன்றும் குறைந்தது இல்லை. அதே சட்னியை நம் வீட்டில் ஆரோக்கியமான முறையில் எப்படி செய்யலாம்? என்பதையும், ஆந்திரா என்றாலே காரசாரமான உணவிற்கு பெயர் போன ஊராக பார்க்கப்படுகிறது. அங்கு சட்டினி கூட சுவையாகவும், காரசாரமாகவும் இருக்குமாம். ஆந்திரா ஸ்பெஷல் கார சட்னி சுலபமான முறையில் எப்படி செய்வது என்பதையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

road-side-tomato-chutney

‘ரோட்டுக்கடை தக்காளி சட்னி’ செய்ய தேவையான பொருட்கள்:
பழுத்த தக்காளி – 4
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்

- Advertisement -

கறிவேப்பிலை – ஒரு கொத்து
பெருங்காயத்தூள் – சிட்டிகை அளவிற்கு
உப்பு தேவையான அளவிற்கு
சமையல் எண்ணெய் தேவையான அளவிற்கு

road-side-tomato-chutney1

‘ரோட்டுக்கடை தக்காளி சட்னி’ செய்முறை விளக்கம்:
முதலில் தக்காளி பழங்களை நன்கு கழுவி நான்காக நறுக்கி மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு கடாயில் எண்ணெயை தேவையான அளவிற்கு ஊற்றி அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் அதில் கறிவேப்பிலை சேர்த்து வதக்குங்கள் பின்னர் பெருங்காயத்தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். பின்னர் அதில் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். அவ்வளவுதான் ரொம்ப ரொம்ப சுலபமாக ரெண்டே நிமிடத்தில் ரோட்டு கடை தக்காளி சட்னி எளிமையான முறையில் சுவையாக செய்து விடலாம்.

- Advertisement -

‘ஆந்திரா ஸ்பெஷல் கார சட்னி’ செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10
வர மிளகாய் – 10
கடலைப்பருப்பு ஒரு கைப்பிடி

onion-chutney1

புளி – சிறு நெல்லிக்காய் அளவிற்கு
உப்பு – தேவையான அளவிற்கு
கடுகு – கால் டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து

‘ஆந்திரா ஸ்பெஷல் கார சட்னி’ செய்முறை விளக்கம்:
முதலில் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள் அதில் வாணலி ஒன்றை வைத்து தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் பத்து வர மிளகாய்களை போட்டு லேசாக வதக்கி எடுங்கள். பின்னர் அதே எண்ணெயில் கடலைப்பருப்பு போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும். அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின் அதே எண்ணெயில் பொரித்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி எடுங்கள். பின்னர் எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு நன்கு கொரகொரவென அரைத்து எடுங்கள்.

onion-chutney

இப்போது தாளிப்பு கரண்டியில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சட்னியில் கொட்ட வேண்டும். அவ்வளவுதாங்க ரொம்ப ரொம்ப சிம்பிளா சூப்பரான காரசாரமான ஆந்திரா ஸ்பெஷல் காரச் சட்னி தயாராகிவிட்டது. மேலே கூறிய இந்த இரண்டு வகை சட்னிகளையும் 10 நிமிடத்தில் செய்து விடலாம். அடிக்கடி ஒரே மாதிரியான சட்னி செய்து போரடித்து போனவர்கள் இந்த இரண்டு சட்னிகளையும் ட்ரை பண்ணி பாருங்க! நீங்களும் உங்கள் வீட்டில் இருப்பவர்களை அசத்தி விடலாம்.

- Advertisement -