‘ரோட்டு கடை முட்டை ஃப்ரைட் ரைஸ்’ இப்படிக்கூட செய்யலாமே! பெரிய பெரிய ஹோட்டல் சுவையை மிஞ்சும் அளவிற்கு இருக்கும்.

egg-fried-rice
- Advertisement -

நாம் பெரிய பெரிய ரெஸ்டாரன்ட்களில் வாங்கி சாப்பிடும் ஃப்ரைட் ரைஸை விட சாதாரணமாக தள்ளு வண்டி கடைகளிலும், ரோட்டு கடைகளிலும் விற்கப்படும் ஃப்ரைட் ரைஸ் அவ்வளவு சுவையில் இருப்பதற்கு மிக முக்கிய காரணம் அதில் சேர்க்கப்படும் எளிய பொருட்கள் தான். அனைவருக்கும் மிகவும் விருப்பமான ‘ரோட்டுக்கடை முட்டை ஃப்ரைட் ரைஸ்’ சுலபமான முறையில் நம் வீட்டிலேயே எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

‘ரோட்டு கடை முட்டை ஃப்ரைட் ரைஸ்’ செய்ய தேவையான பொருட்கள்:
ஒரு கப் – பாஸ்மதி அரிசி, கேரட் – 1, பீன்ஸ் – 10, முட்டைக்கோஸ் துருவியது – ஒரு கைப்பிடி அளவிற்கு, வெங்காயத்தாள் – ஒரு கைப்பிடி அளவிற்கு, பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 2, முட்டை – 4, மிளகுத்தூள் – அரை டேபிள் ஸ்பூன், கரம் மசாலா – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவிற்கு, சமையல் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

‘ரோட்டு கடை முட்டை ஃப்ரைட் ரைஸ்’ செய்ய ஆகும் நேரம் மற்றும் எவ்வளவு பேருக்கு பரிமாறலாம்?
இந்த முட்டை ஃப்ரைட் ரைஸ் பரிமாற கூடிய நபர்களின் எண்ணிக்கை பெரியவர்களாக இருந்தால் இரண்டு என்று எடுத்துக் கொள்ளலாம். சமைக்க ஆகும் நேரம் 20 லிருந்து 25 நிமிடம் வரை ஆகலாம்.

egg-fried-rice

‘ரோட்டு கடை முட்டை ஃப்ரைட் ரைஸ்’ செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு கப் அளவிற்கு பாஸ்மதி அரிசியை கழுவி தண்ணீரை முழுவதுமாக வடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் திரும்பவும் தண்ணீர் சேர்த்து ஊற வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதை விட இரண்டு மடங்கு அளவிற்கு தண்ணீரை ஊற்றி அடுப்பை பற்ற வைத்து கொதிக்க விடுங்கள். உலை கொதித்ததும் அரிசியைப் போட்டு உதிரி உதிரியாக வடித்து எடுத்துக் கொள்ளுங்கள். அரிசி எந்த அளவிற்கு உதிரியாக இருக்கிறதோ அந்த அளவிற்கு பிரைட் ரைஸ் சுவையாக இருக்கும். எனவே இதில் கவனம் செலுத்துங்கள்.

- Advertisement -

ஒரு அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு சமையல் எண்ணெயை ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்து வந்ததும் அதில் பொடிப் பொடியாக நறுக்கிய பூண்டு பற்கள் மற்றும் பச்சை மிளகாய்கள் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு நீளமாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி வாருங்கள்.

பின் பொடி பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், வெங்காயத்தாள், முட்டைகோஸ் ஒரு கைப்பிடி அளவு ஆகியவற்றை சேர்த்து வதக்குங்கள். காய்கறிகள் பாதி அளவிற்கு வெந்ததும் அவற்றை ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு நடுப்பகுதியில் முட்டையை உடைத்து ஊற்றி விடுங்கள். பின்னர் உடனே அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளுங்கள்.

fried-rice

முட்டையை அவ்வபோது லேசாக பிரட்டி விடுங்கள். கரண்டியை வைத்து கிண்டாதீர்கள், முட்டை உதிர்ந்து விடும். லேசாக பிரட்டி எடுத்தால் பெரிய பெரிய வில்லைகளாக அழகாக வரும். அதன் பிறகு நீங்கள் உதிரியாக வடித்த சாதத்தை சேர்த்து ஒருமுறை கிளறி கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு உப்பு மற்றும் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். பின்னர் இறுதியாக மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவு தான் சுடச்சுட தட்டில் பரிமாறினால் ஒரு பருக்கை கூட அதில் மிஞ்சாது அந்த அளவிற்கு சுவையாக இருக்கும் நீங்களும் செய்து பாருங்கள்.

- Advertisement -