ரோட்டு கடை மசாலா சுண்டலை நம்முடைய வீட்டில் இவ்வளவு ஈசியா செய்ய முடியுமா? வெறும் 15 நிமிஷம் போதுமே!

masala-sundal
- Advertisement -

ரோட்டு கடைகளில் விற்கும் பட்டாணி சுண்டலை யாரும், பிடிக்காதுன்னு  சொல்லவே மாட்டாங்க. அந்த அளவிற்கு அதனுடைய சுவை சூப்பரா இருக்கும். இதோடு சேர்த்து அதிலிருந்து வரக்கூடிய, அந்த வாசம் நம்முடைய மூக்கைத் துளைக்கும். சில பேர், ரோட்டு கடையாக இருக்கின்றதே, ஆரோக்கியம் இருக்குமோ இல்லையோ என்று அந்த இடத்தில் சாப்பிடுவதற்கு சங்கடப்பட்டு கொண்டு, ஆசைகளை அடக்கிக் கொள்வார்கள். இனி கஷ்டப்பட வேண்டாம். உங்கள் வீட்டிலேயே, உங்கள் கையாலேயே ரோட்டுக் கடையில் விற்கும் அதே சுவையில், அந்த சுண்டல் மசாலாவை சுலபமாக செய்து விடலாம். அது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

pattani3

Step 1:
முதலில் ஒரு 200 கிராம் அளவுள்ள வெள்ளை பட்டாணி அல்லது பச்சை பட்டாணியை முந்தைய நாள் இரவே ஊற வைத்து விடுங்கள். காலையில் சுண்டல் செய்வதாக இருந்தால் இரவில் ஊற வைத்துக் கொள்ளலாம். மாலை நேரத்தில் சுண்டல் செய்ய வேண்டுமென்றால், காலையில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். மொத்தமாக அந்த பட்டாணி 10 மணி நேரம் ஊற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Step 2:
நன்றாக ஊறிய அந்த பட்டாணியை இரண்டு முறை தண்ணீரில் கழுவி விட்டு, ஒரு குக்கரில் போட்டு, 3 கப் அளவு தண்ணீரையும் ஊற்றி, பட்டாணிக்கு தேவையான உப்பை மட்டும் போட்டு, மூன்று விசில் வைத்து வேக விட்டு விட வேண்டும். வெந்த பின்பு அந்த சுண்டலிருந்து தண்ணீரை மட்டும் வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரை கீழே ஊற்றி விடாதீர்கள்.

sundal

Step 3:
அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது – 1, பெரிய தக்காளி – 1, பச்சை மிளகாய் – 3, பூண்டு – 5 பல், இஞ்சி 1 சிறிய துண்டு, சோம்பு – 1/2 ஸ்பூன், சீரகம் 1/2 ஸ்பூன், எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் எதுவும் ஊற்ற வேண்டாம். தக்காளியில் இருக்கும் தண்ணீரே போதும்.

- Advertisement -

Step 4:
அடுப்பில் ஒரு கடாயை வைத்து 4 டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்திருக்கும் விழுதை எண்ணெயோடு சேர்த்து, கை விடாமல் வதக்க வேண்டும். இந்த விழுது பச்சை வாடை நீங்கி, நாம் ஊற்றிய எண்ணெய் அனைத்தும் பிரிந்து வரும் அளவிற்கு வதக்கவேண்டும். மொத்தமாக எட்டிலிருந்து பத்து நிமிடங்கள் எடுக்கும். அடுப்பை மிதமான தீயில் வைத்து வதக்குங்கள்.

sundal1

எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் குழம்பு மிளகாய் தூள் – 1 ஸ்பூன், தனி மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், கிரேவிக்கு தேவையான அளவு மட்டும் உப்பு, இவைகளை சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்க வேண்டும். அடுத்தபடியாக பச்சை பட்டாணியில் இருந்து வடித்து வைத்திருக்கும் தண்ணீரை கடாயில் சேர்த்து, கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி கொள்ளுங்கள். 2 கப் அளவு தண்ணீர் தாராளமாக ஊற்றலாம்.

- Advertisement -

கடாயில் இருக்கும் மசாலா சேர்த்த இந்த பட்டாணி தண்ணீரானது, நன்றாக 10 நிமிடங்கள் வரை, மிதமான தீயில் கொதிக்க வேண்டும். அதில் இருக்கும் பச்சை வாடை அனைத்தும் நீங்கிய பின்பு, இறுதியாக பச்சை பட்டாணியை சேர்த்து 2 நிமிடங்கள் மீண்டும் கொதிக்கவிட வேண்டும். இப்போது உங்களுக்கு கடையில் கிடைப்பது போன்ற திக்கான பட்டாணி சுண்டல் கிடைத்திருக்கும்.

sundal2

Step 5:
ஒரு பவுலில் பட்டாணி சுண்டலை  போட்டு, மேலே பொடியாக நறுக்கிய பச்சை வெங்காயத்தை தூவி, கொஞ்சமாக கொத்தமல்லி தழையை தூவி உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுத்து பாருங்கள். இது எந்த கடையில் வாங்கிய சுண்டல் என்று கேட்பார்கள்! நிச்சயமாக அவ்வளவு ருசியாக இருக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது.

இதையும் படிக்கலாமே
நவகிரகங்களை தினமும் இந்த 1 மந்திரத்தை சொல்லி வழிபட்டால் நடக்கும் அதிசயங்கள் என்னென்ன?

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -