நவகிரகங்களை தினமும் இந்த 1 மந்திரத்தை சொல்லி வழிபட்டால் நடக்கும் அதிசயங்கள் என்னென்ன?

navagragam-mantra

மனிதனுக்கு நவகிரகங்கள் என்பது மூச்சுக் காற்றை போல நம்மை இயங்க வைக்க வேலை செய்து கொண்டிருக்கும் இயக்கங்களாக உள்ளன. நவகிரகங்கள் இன்றி நமக்கு எதுவுமே நடப்பதில்லை. நாம் நல்லது செய்தாலும் அது நவக்கிரகங்களால் தான். கெட்டது செய்தாலும் அதுவும் நவக்கிரகங்கள் தான் காரணமாக இருக்கும். நவகிரகங்களை தனித்தனியாக வணங்குவதன் பலன்களை விட தினமும் செய்யும் வழிபாட்டை நவக்கிரகங்களுக்கும் சேர்த்து செய்து பாருங்கள். நல்ல பலன் தெரியும். உங்களுடைய அத்தனை கஷ்டங்களையும் மாற்றும் சக்தி இதற்கு உண்டு. நவக்கிரகங்களை வழிபடுவது எப்படி? அதிகளவில் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதைத் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

navagragha-mandhiram

நவகிரகங்களை வழிபடும் பொழுது வீட்டில் படம் வைத்து வழிபடலாமா? என்கிற சந்தேகம் எல்லோருக்கும் வரும். நவகிரகங்களை தனித்தனியாக வீட்டில் வைத்து வழிபட கூடாது. ஒரு சிலர் தனக்கு இருக்கும் தசாபுத்திக்கு ஏற்ப படங்களை வாங்கி வைத்து வணங்கி வருவார்கள். அது போல் செய்யக்கூடாது. நவகிரகங்களை கோவிலுக்கு சென்று வழிபடுவது தான் சிறந்த முறை. வீட்டில் வைத்து வழிபடுவதற்கு சாதாரணமாக கிடைக்கக்கூடிய நவகிரஹ படங்களை வாங்கி வைத்து வணங்கினால் போதும். தினமும் நவகிரகங்களுக்கு இந்த மந்திரத்தைக் கூறி வழிபடுவதால் நமக்கு கிடைக்க இருக்கும் நன்மைகள் ஏராளம்.

சூரிய பகவான்:
நவகிரகங்களில் சூரிய பகவானை வணங்குவதால் ஆரோக்கிய பிரச்சனைகள் தீரும். நல்ல வளர்ச்சி ஏற்படும். நோய் நொடிகளால் அவஸ்தைப் படுபவர்கள் இந்த வழிபாட்டை செய்யலாம். நல்ல ஆரோக்கியம் பெற இந்த மந்திரம் சொல்லி வரலாம்.

Lord-Chandra

சந்திர பகவான்:
மன குழப்பத்தில், மன சங்கடத்தில் இருப்பவர்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்வதால் சந்திர பகவானால் உங்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் ஏராளம். நல்ல மனத்தெளிவு உண்டாக்குவார். பேரும், புகழும் கிடைக்க செய்வார். கீர்த்தி உண்டாக்குவார்.

- Advertisement -

செவ்வாய் பகவான்:
தைரியம், வீரம், ஆண்மை போன்றவற்றிற்கு செவ்வாய் பகவான் துணையாக இருப்பார். நவகிரக வழிபாட்டை நீங்கள் மேற்கொள்வதன் மூலம் செவ்வாய் பகவான் உங்களுக்கு வாரி வழங்குவார். எதற்கெடுத்தாலும் பயம் என்று இருப்பவர்கள் நவகிரகங்களை வழிபடலாம். பிள்ளைப் பேறு உண்டாக இந்த மந்திரத்தை சொல்லி நவகிரகங்களை வழிபடலாம்.

puthan

புத பகவான்:
குறிப்பாக குழந்தைகள், மாணவர்கள் நல்ல அறிவாற்றல் பெற, புத்திக்கூர்மையுடன் இருப்பதற்கு இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். நவகிரக வழிபாட்டை மேற்கொண்டால் இவைகள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். தெளிவான சிந்தனை செய்யக் கூடிய ஆற்றல் உண்டாகும்.

குரு பகவான்:
பெரிய பொறுப்பில் இருப்பவர்கள், அந்தஸ்து, அதிகாரம் என்று இருப்பவர்கள் வறுமையில் வாடுபவர்கள், ஏழை எளிய மக்கள் போன்றோர் இந்த வழிபாட்டை மேற் கொள்வதால் குருபகவானால் நிறைய நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். குரு பகவான் மதிப்பும், மரியாதையும், செல்வாக்கும் தரக்கூடியவர். செல்வ வளம் பெருக குரு பகவான் துணை புரிவார்.

sukran

சுக்கிர பகவான்:
இந்த நவகிரக வழிபாட்டை நீங்கள் மேற்கொள்வதால் சுக்கிரனால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன தெரியுமா? சுக்கிர பகவான் இளமையான தோற்றத்துடன் உங்களை இருக்க வைப்பார். அழகும், வசீகரமும் மற்றவர்களை கவரும் வண்ணம் செய்து விடுவார். பொருளாதார நிலையை மேம்படுத்துவார்.

ராகு பகவான்:
நவகிரகங்களில் மிக முக்கியமான இரண்டு கிரகங்கள் ராகு-கேது போன்றவையாகும். நவகிரக வழிபட்டால் ராகு கேது உங்களுக்கு நிறைய நன்மைகள் தருவார். அதில் ராகு பகவான் மிகப்பெரிய சிந்தனையும், பேராசையும் கொள்ள செய்வார். என்னடா பேராசை இருந்தால் நல்லதா? என்று முழிக்காதீர்கள். நம்முடைய குறிக்கோள் பெரியதாக இருக்கும் பட்சத்தில் தான் சிறிய அளவிலாவது நம்மால் ஜெயிக்க முடியும். ஆசையை பெரியதாக வையுங்கள் என்பதைத் தான் இவ்வாறு கூறப்படுகிறது.

Astrology ketu

கேது பகவான்:
நவகிரக வழிபாட்டால் கேது பகவான் உங்களுக்கு நுண்ணறிவு மற்றும் ஞானத்தை வழங்குவார். இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வந்தால் துல்லியமான சிந்தனையும், பகுத்தறியும் ஞானமும் கிடைக்கப் பெறும்.

சனி பகவான்:
சனி பகவான் என்றாலே பலருக்கும் ஒருவித பயம் வரும். ஆனால் உண்மையில் சனிபகவான் மிகவும் நல்லவர். நவகிரக வழிபாட்டை மேற்கொண்டால் சனி பகவான் மூலம் உங்களுக்கு நேர்மையான குணம் வரும். மனிதநேய குணம் அதிகரிக்கும். மனிதநேயம் இன்றி ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவாமல் இருந்தால் சனி பகவான் உங்களுக்கு ஆபத்தை கொடுப்பார். ஒரு சிலருக்கு சொன்னால் புரியாது, பட்டால் தான் புரியும் என்பார்கள் அல்லவா? அவற்றை செய்விப்பதும் சனிபகவான் தான். நல்ல படிப்பினையை தருவார்.

sani bagavaan

சரி இப்பொழுது என்ன மந்திரத்தை உச்சரித்து வழிபட வேண்டும் என்பதை பார்ப்போம். நவகிரகங்களின் படம் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி நவகிரகங்களை மனதில் நினைத்து தினமும் ஒரு ஐந்து நிமிடம் அமைதியாக அமர்ந்து இந்த மந்திரத்தை 16 முறை உச்சரியுங்கள். இந்த 1 மந்திரத்தால் நவக்கிரகங்களையும் வழிபட்ட பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். மேற்கூறிய அத்தனை நல்லவைகளும் உங்களுக்கு நடக்கும்.

Navagragham

இதோ உங்களுக்கான நவக்கிரக மந்திரம்:
ஓம் ஹரீம் ஆதித்யாயச
சோமாய மங்களாய புதாயச
குரு சுக்ர சனிப்யச்ச
ராஹவே கேதவே நமஹா!!

இதையும் படிக்கலாமே
வியாபாரம் மற்றும் தொழில் செய்யும் இடங்களில் இந்த 2 மந்திரத்தை உச்சரித்தால் பணவரவு அமோகமாக இருக்கும் தெரிந்து கொள்ளுங்கள்!

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.