ரோட்டு கடை சூப்பர் சால்னா! வீட்டிலேயே செய்வது எப்படி? ரோட்டு கடை சால்னாவில் இருக்கக்கூடிய ரகசிய டிப்ஸ்.

salna
- Advertisement -

ரோட்டு கடைகளில், பரோட்டாவிற்கு தொட்டுக்கொள்ள கொடுக்கும் சால்னாவில் இருக்கும் சுவை, என்னதான் வீட்டில் முயற்சி செய்தாலும் வராது. அதே சுவையில், அந்த சால்னா குருமாவை நம் வீட்டில் வைத்தால், எப்படி இருக்கும்? நமக்கும் அந்த ரகசிய டிப்ஸ் தெரிந்தால், நம் வீட்டிலேம் செய்து அசத்தலாம் அல்லவா? உங்களுக்காக, ரோட்டுக் கடையில் செய்யக்கூடிய சால்னா எப்படி செய்வது, என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சின்ன சின்ன டிப்ஸ் ஃபாலோ பண்ணி செய்தாலே போதும். சால்னா குருமா சூப்பரா இருக்கும்.

salna1

Step 1:
முதலில் மிக்ஸி ஜாரில் அரை மூடி தேங்காயைத் துருவிப் போட்டு கொள்ளுங்கள். 15 முந்திரிப் பருப்பு, 1/2 ஸ்பூன் கசகசா, அரை ஸ்பூன் சோம்பு, லவங்கம் – 1, சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு விழுதாக மொழு மொழு என்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

Step 2:
அடுத்ததாக ஒரு கடாயில் 4 டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, சோம்பு, லவங்கம், பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப்பூ, இவைகளைப் போட்டு தாளிக்க வேண்டும். குரு மாவிற்கு தேவையான அளவு. எல்லா பொருட்களிலிருந்தும் 2 போட்டால் போதும்.

annachi-poo-pattai

அடுத்தபடியாக, பொடியாக நறுக்கிய 2 வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கிய உடன், 1 பெரிய தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும், அடுத்ததாக 4 பச்சை மிளகாயைக் குறுக்குவெட்டி போட்டு வதக்க வேண்டும். தக்காளி வதங்கியதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன், மிளகாய் தூள் – 2 ஸ்பூன், மல்லித் தூள் – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், சிக்கன் மசாலா – 1 ஸ்பூன், சேர்த்து மசாலாவின் பச்சை வாடை போகும் அளவிற்கு வதக்கி விட வேண்டும்.

- Advertisement -

Step 3:
இறுதியாக அரை கைப்பிடி அளவு கொத்த மல்லித்தழை, அரை கைப்பிடி அளவு புதினா தழைகளை சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு ஒரு நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும். இந்த இடத்தில் நாம் 1 ஸ்பூன் அளவு கடலை மாவை, 1/2 கப் அளவு தண்ணீரில் கரைத்து கடாயில் சேர்க்க வேண்டும்.

coconut-broken

கடலை மாவு சேர்த்து இந்த கலவையானது 5 நிமிடங்கள் மிதமான தீயில் வெந்து வந்ததும், அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை கடாயில் சேர்த்து இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு, மிதமான தீயில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதாவது, நாம் சால்னாவில் ஊற்றி இருக்கும் எண்ணெய் பிரிந்து மேலே மிதக்க வேண்டும். இதற்கு குறைந்தது 30 நிமிடங்கள் வரை எடுக்கும்.

- Advertisement -

kadalai-maavu2

சால் மாவில் உப்பு காரம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, சிம்மில் வைத்து ஒரு மூடி போட்டு அப்படியே கொதிக்க வைத்தால், சூப்பர் ரோட்டு கடை சால்னா தயார். இறுதியாக கொத்தமல்லி தழையை தூவி பரிமாற வேண்டியதுதான். (சால்னா கொதிக்க கொதிக்க கெட்டி ஆகிக்கொண்டே இருக்கும். தேவையான அளவு தண்ணீரை முதலிலேயே ஊற்றி விடுங்கள். ரொம்பவும் கெட்டியாக வந்தால் கொதிக்கும் நீரை ஊற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.)

salna2

கட்டாயம் சிக்கன் மசாலா சேர்க்க வேண்டும். கடலைமாவு சேர்க்கவேண்டும். முந்திரி பருப்பு சேர்க்க வேண்டும். இந்த மூன்று குறிப்புகளையும் பின்பற்றி செய்தால்தான் சால்னா ருசியாக இருக்கும். இந்த சால்னா இட்லி தோசை சப்பாத்தி பரோட்டா இவைகளுக்கு சூப்பர் சைட் டிஷ்ஷாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
வெள்ளி பாத்திரம், கொலுசு, பூஜை சாமான்கள் அனைத்தும் புதுசு போல் மின்ன இந்த 1 பொருள் மட்டும் போதும்! வேற ஒன்றும் தேவையே இல்லை.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -