வெள்ளி பாத்திரம், கொலுசு, பூஜை சாமான்கள் அனைத்தும் புதுசு போல் மின்ன இந்த 1 பொருள் மட்டும் போதும்! வேற ஒன்றும் தேவையே இல்லை.

silver-cleaning
- Advertisement -

நம் வீட்டில் இருக்கும் வெள்ளிப் பாத்திரங்கள், கொலுசு, பூஜைக்கு தேவையான வெள்ளி சாமான்கள் என அனைத்தும் நாளடைவில் நிறம் மங்கி கருப்பாக மாறி விடுவதை நாம் பார்த்திருப்போம். அதை சுத்தம் செய்வது மிகப் பெரிய விஷயமாக நமக்கு இருக்கும். பித்தளை பொருட்களுக்கு பீதாம்பரி தேய்த்தாலே பளிச் சென்று மாறி விடும். ஆனால் வெள்ளிப் பொருட்களுக்கு என்று பிரத்தியேகமாக விற்கப்படும் பொருட்கள் கூட அந்த அளவுக்கு நமக்கு ரிசல்ட் கொடுப்பது இல்லை.

silver

நகை கடைகளில் வேலை செய்பவர்கள் இந்த முறையை பயன்படுத்தி தான் வெள்ளிப் பொருட்களை பளிச்சென்று வைத்திருக்கிறார்கள். அதை நாமும் முயற்சி செய்து பார்ப்போம். ஐந்து நிமிடத்தில் ஒரே ஒரு பொருள் கொண்டு புத்தம் புத்தம் புதியதாக நம்முடைய வெள்ளிப் பொருட்களை மாற்றி விட முடியும். அதை எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

வெள்ளிப் பொருட்கள் வெளியே வைத்தால் நாம் உபயோகபடுத்தா விட்டாலும் நாளடைவில் காற்றின் மூலம் வரும் மாசினால் கருமை அடைந்துவிடும். அதிலும் பெண்கள் அணியும் கொலுசு அதிவிரைவாக கருமை படர்ந்து பார்ப்பதற்கே நன்றாக இருப்பதில்லை. உடலில் அதிக பித்தம் கொண்டு இருப்பவர்கள் அணியும் கொலுசு அடிக்கடி அதிக கருப்பு அடைந்து விடுவதை பார்த்திருப்போம். இது போன்றவர்கள் மிக மிக சுலபமாக இந்த ஒரே ஒரு பொருளைக் கொண்டு ஐந்தே நிமிடத்தில் தங்களுடைய பழைய கொலுசை புத்தம் புதிய கொலுசாக மாற்றி விடலாம்.

kolusu-leg

அது போல் பூஜைக்கு பயன்படுத்தும் விளக்கு மற்றும் இதர பொருட்கள் அதிகம் கறுத்துப் போயிருந்தால் இந்த டிப்ஸை பயன்படுத்தினால் கடையில் புதிதாக வாங்கியது போல் பளபளன்னு மின்னும். இதற்கு தண்ணீர் மற்றும் வீட்டிலிருக்கும் எந்த பொருளும் உபயோகிக்க தேவையில்லை.

- Advertisement -

நாம் பற்களுக்கு உபயோகிக்கும் கோல்கேட் டூத் பவுடர் அல்லது வேறு ஏதேனும் டூத் பவுடராக இருந்தாலும் பரவாயில்லை. பற்களுக்கு உபயோகிக்கும் பற்பசையை விட அதாவது பேஷ்டை விட டூத் பவுடர் வெள்ளியின் மீது மிகவும் சக்தி வாய்ந்த ஆற்றல் புரியும். அதனால் பற்பசையை உபயோகிக்க வேண்டாம்.

kolusu

பற்பொடியை தண்ணீர் படாமல் வெள்ளி பாத்திரங்கள், கொலுசுகள், பூஜை சாமான்கள் என்று எந்த பொருளாக இருந்தாலும் அதில் நன்கு தேய்த்து விட்டால் நொடியில் பளபளன்னு மின்னும். சுலபமாக இருக்கும் இடங்களில் சுத்தமான வெள்ளை காட்டன் துணியை கொண்டு பற்பொடியை எடுத்து வெள்ளி பொருள் மீது தடவி நன்கு துடைத்துவிட வேண்டும். சற்று வேலைப்பாடுகள் அதிகம் உள்ள பகுதிகளில் துணியால் தேய்த்தாலும் உள்ளுக்குள் இருக்கும் கருமை நீங்காது அல்லவா? இதனால் அதற்கு டூத் பிரஷ் உபயோகப்படுத்தலாம்.

- Advertisement -

tooth-powder

ஆனால் தண்ணீர் படாமல் நன்கு அழுத்தித் தேய்க்க வேண்டும். ஒரு ஒரு பக்கமாக, சிறிது சிறிதாக தேய்த்து விட்டால் வெள்ளி பொருளில் இருக்கும் கருமை அந்த பவுடரில் கலந்து பவுடர் கருப்பாக மாறி விடுவதை பார்க்கலாம். கருமை முழுவதும் பற்பொடியானது கிரகித்துக் கொள்ளும். இதனால் வெள்ளிப் பொருட்கள் நொடியில் பளபளன்னு புதிதாக கடையில் வாங்கியது போல் ஜொலிக்கும்.

silver-things

பொதுவாக வெள்ளி பொருட்களை சுத்தம் செய்ய எலுமிச்சை, பேக்கிங் சோடா போன்ற பொருட்கள் உபயோகப்படுத்துவது உண்டு. இது எதுவுமே தேவையில்லை வெறும் பற்பொடியை கொண்டு ஐந்து நிமிடம் தேய்த்தால் உங்களுடைய வெள்ளிப் பொருட்கள் அனைத்தும் புத்தம் புதியதாக மாறிவிடும். பற்பொடி பல்லை பளிச்சென்று ஆக்குதோ இல்லையோ வெள்ளியை நிச்சயம் ஆக்கும். நீங்களும் ஒரு முறை உங்கள் வீட்டில் முயற்சி செய்து பயன் அடையுங்கள்.

இதையும் படிக்கலாமே
இந்த விஷயம் மட்டும் தெரிஞ்சா ஜாதிமல்லி செடியை சிறிய தொட்டியில் கூட நிறைய பூக்கள் பூக்க வைக்க முடியும்.

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -