நாளை கோகுலாஷ்டமி – இவற்றை மறக்காமல் செய்து மிகுதியான பலன்களை பெறுங்கள்

Lord krishnar
- Advertisement -

நமது புராணங்களில் சந்திர பகவான் வானில் இருக்கும் 27 நட்சத்திரங்களையும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த 27 நட்சத்திரங்களில் சந்திரனுக்கு மிகவும் விருப்பமான நட்சத்திரமாக ரோகிணி நட்சத்திரம் இருக்கிறது. இந்த ரோகிணி நட்சத்திரத்தில் தான் “ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா” அவதரித்தார். இத்தனை சிறப்புக்கள் கொண்ட ரோகிணி நட்சத்திர தினத்தில் “ரோகிணி விரதம்” மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Krishnar

ரோகிணி நட்சத்திரம் மகாவிஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமும், மனிதர்களுக்கு சிறந்த நீதியை போதிக்கும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா பிறந்த நட்சத்திரம் ஆகும். பகவான் கிருஷ்ணர் பிறந்த ஆவணி மாதம் அஷ்டமி திதியான கோகுலாஷ்டமி தினத்தில் இந்த ரோகிணி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த விரதத்தை கேரள மாநில மக்கள் பல காலமாகவே மேற்கொண்டுவருகின்றனர். கிருஷ்ண பகவானின் முழுமையான அருளை பெறுவதற்கு அம்மக்கள் இவ்விரதத்தை மேற்கொள்கின்றனர்.

- Advertisement -

பொதுவாக நம் நாட்டில் கிருஷ்ண ஜெயந்தி இரண்டு விதமாக கொண்டாடப்படுகிறது. கோகுலாஷ்டமி எனப்படும் ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி தினத்தன்று கிருஷ்ண ஜெயந்தி சிலரால் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் பிறந்த நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரத்தன்று மட்டுமே கிருஷ்ண பகவானுக்கு வழிபாடுகள் செய்து, கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவது வேறு சிலரின் வழக்கமாக இருக்கிறது. எனினும் இங்கே கூறப்பட்டிருக்கும் இந்த ரோகிணி விரதத்தை கோகுலாஷ்டமி அஷ்டமி தினத்திலோ அல்லது ஆவணி மாத ரோகிணி நட்சத்திர தினத்தன்றோ மேற்கொள்ளலாம்.

ஆவணி மாதத்தில் வரும் கிருஷ்ண பகவானின் ஜெயந்தியான கோகுலாஷ்டமி தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும், வீட்டில் இருக்கும் கிருஷ்ண பகவானின் விக்ரகத்திற்கோ, படத்திற்கோ மலர்களால் அலங்காரம் செய்து கேசரி, பாயசம் போன்ற இனிப்பு உணவுகளை நைவேத்தியம் வைத்து கிருஷ்ணா பகவானின் மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் போன்றவற்றை படிப்பது, பகவத் கீதை படித்து கிருஷ்ண பகவானை வழிபட வேண்டும். இந்த விரதத்தின் போது மதியம் மட்டும் கிருஷ்ண பகவானுக்கு வைக்கப்பட்ட நைவேத்திய உணவுகளை மட்டும் சாப்பிட்டு விரதத்தை தொடரலாம்.

- Advertisement -

கிருஷ்ண பகவான் ஜெனித்தது நள்ளிரவு வேளையில் என்பதால், நள்ளிரவு வரை கண்விழித்து கிருஷ்ண நாம ஜெபம் செய்வது சிறப்பானதாகும். பிறகு கிருஷ்ணனை வழிபட்டு உறங்கி மறுநாள் காலை சீக்கிரம் எழுந்து குளித்து முடித்து விட்டு, அருகிலுள்ள விஷ்ணு கோயிலுக்கு சென்று பெருமாளுக்கோ அல்லது கிருஷ்ணனுக்கோ துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும்.

Krishna mantra in tamil

இந்த அஷ்டமி ரோகிணி விரதம் இருந்து கிருஷ்ணனை வழிபடும் பக்தர்களுக்கு நல்ல ஆரோக்கியமான குழந்தை பாக்கியம் உண்டாகும். ஆண் குழந்தை வேண்டும் நபர்கள் இந்த விரதம் மேற்கொள்ள ஆன்மீக பெரியோர்கள் பரிந்துரைக்கின்றனர். வீட்டில் தெய்வ கடாட்சம் உண்டாகும். உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும். தனம், தானியங்களின் சம்பத்து உண்டாகும். திருமண வயதுள்ள பெண்களுக்கு நல்ல குணம் கொண்ட கணவர்கள் வாய்க்க பெறுவார்கள்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
உங்கள் வீட்டில் தரித்திரம் நீங்க இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Rohini vratham in Tamil. It is also called as Gokulashtami viratham in Tamil or Rohini natchathiram in Tamil or Avani rohini ashtami in Tamil or Krishna jayanthi valipadu in Tamil or Avani astami in Tamil.

- Advertisement -