உங்கள் வீட்டில் தரித்திரம் நீங்கி செல்வம் பெருக இவற்றை கட்டாயம் செய்யுங்கள்

money

வாழ்க்கை மிகவும் துன்பகரமானது என புத்தர் கூறினார். இந்தத் தத்துவத்தை மேலோட்டமாக படிக்கும் சிலர் தவறாக அர்த்தம் செய்து கொள்கின்றனர். நமது வாழ்வில் எப்போதும் எந்த வித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் வாழும் போது வாழ்க்கையில் இன்பம் மட்டுமே இருக்கும். ஆனால் ஒவ்வொரு விடயத்திலும் எதிர்பார்ப்பு இருந்தால் அந்த வாழ்க்கை தான் துன்பகரமானது என புத்தர் கூறுகிறார். தற்காலத்தில் நாம் அனைவருக்குமே ஏதாவது ஒரு வகையிலான எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. குறிப்பாக பொருளாதாரம் சார்ந்த விருப்பங்கள் அதிகம் இருக்கின்றன. அத்தகைய விருப்பம் அனைவருக்குமே இருந்தாலும் பலருக்கும் அது நிறைவேறாமல் போகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு வாழ்வில் சகல இன்பங்களையும் அனுபவிக்க செய்யும் சில தாந்த்ரீக பரிகார முறைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

money

நாம் என்னதான் கடினமாக உழைத்தாலும் ஈட்டுகின்ற பணம் அன்றாட உணவுக்கும், வாங்கிய கடன்களை தீர்ப்பதற்கும் செலவழிந்து நமக்கு தேவையான இன்ன பிற அத்தியாவசிய வசதிகளை கூட செய்து கொள்ள முடியாத நிலை பலருக்கு ஏற்படுகிறது. இதையே பெரியோர்கள் தரித்திர நிலை என கூறுகின்றனர். இந்த தரித்திரம் ஒரு குடும்பத்தை பிடித்தால், அவர்கள் படுகின்ற உடல் மற்றும் மனக்கஷ்டங்கள் சொல்லிமாளாது. எனினும் இப்போதைய நிலையில் இருப்பவர்கள் இறைவனின் மீது திட நம்பிக்கையுடன் சில ரகசியப் பரிகார முறைகளை செய்வதால் வாழ்வில் தரித்திரங்கள் ஒழிந்து அனைத்திலும் ஏற்றமிகு பலன்களை பெற முடியும்.

குடும்பத்தில் மிகவும் பொருளாதார கஷ்டங்களை அனுபவிப்பவர்கள் ஒரு அமாவாசை தினத்தன்று ஒரு வாழை இலையை வைத்து, அதில் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஒரு பிடி அரிசியை எடுத்து போட வேண்டும். அதன் பிறகு அனைவரும் தங்களது கைகளால் ஒரு தேக்கரண்டி அளவு தயிரை அந்த அரிசி குவியலில் போட வேண்டும், பிறகு அனைவரும் ஒரு எலுமிச்சம் பழத்தை அந்த அரிசி, தயிறு கலவையில் வைக்க வேண்டும். அதனுடன் ஆளுக்கு ஒரு கிராம்பு துண்டினை அந்த கலவையில் போடவேண்டும். இதன் பிறகு அனைவரும் தங்கள் கைகளால் ஒரு சிட்டிகை குங்குமத்தை அந்த அரிசி, தயிர், எலுமிச்சம்பழம், கிராம்பு கலவையின் மீது தூவ வேண்டும். இதன் பிறகு அந்த இலையை எடுத்து அனைவரும் ஒருவர் மாற்றி ஒருவர் சிறிது நேரம் தங்களின் கைகளில் வைத்து உங்கள் தரித்திரம் நீங்க வேண்டும் என நினைத்து, பிறகு நள்ளிரவில் உங்கள் பகுதியில் நான்கு சாலைகள் சந்திக்கும் சாலையில் இந்த பரிகார பூஜை செய்யப்பட்ட பொருட்களை வீசி விட வேண்டும். இந்த பரிகாரத்தை குறைந்தபட்சம் எட்டு அமாவாசை தினங்கள் செய்து வருவது நல்லது. இந்த பரிகாரம் செய்ய தொடங்கும் காலத்தில் இருந்து உங்கள் குடும்பத்தில் மனதிற்கினிய பல மாற்றங்கள் ஏற்படுவதை அனுபவ ரீதியாக உணர முடியும்.

speaking people

வீட்டில் தரித்திர நிலை உண்டாகாமல் இருக்க கணவன் மனைவி எப்போதும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். கணவன் மனைவியோ அல்லது மனைவி கணவனையோ மட்டகரமான, ஆபாச வார்த்தைகள் கூறி திட்டும் போக்கை ஒருபோதும் பின்பற்றக்கூடாது. இப்படிப்பட்ட வார்த்தைகள் கூறி தம்பதிகள் திட்டிக் கொள்வதால் அந்த வீட்டிற்குள் லட்சுமி உட்பட எந்த தெய்வங்களும் வாசம் செய்யாமல் வெளியேறி நிச்சயம் தரித்திர நிலை உண்டாக்கும்.

- Advertisement -

hanuman

உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் கோயில்களுக்கு துடைப்பம் வாங்கித் தருவது உங்கள் ஜாதகத்தில் பாதகமான பலன்களை ஏற்படுத்தும் கிரகங்களின் தோஷத்தை போக்குவதற்கான சிறந்த பரிகாரமாக இருக்கிறது. அதிலும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு இத்தகைய துடைப்பத்தை தானமாக தருவது உங்களின் கிரக தோஷங்களை போக்கி வாழ்வில் மிக சிறந்த பலன்களை தர வல்லதாக இருக்கிறது.

இதையும் படிக்கலாமே:
அத்தி வரதருக்கு கிடைத்த உண்டியல் வருமானம் எவ்வளவு

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Poverty removal remedies in Tamil. It is also called as Lakshmi kadatcham peruga in Tamil or Varumai neenga in Tamil or Daridram in Tamil or Dharidhram neenga in Tamil.