நியூசி தொடரை அடுத்த ஆஸ்திரேலிய தொடரில் ரோஹித், தவான் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு புதிய துவக்க ஜோடியாக இவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் – ரவி சாஸ்திரி

rohith dhawan

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கு அடுத்து ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த மாதம் இறுதியில் இந்த தொடர் ஆரம்பிக்க உள்ளது.

koli dhawan

5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

மேலும், அப்படி ஓய்வு அளித்தால் ராகுல் மற்றும் ரஹானே ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள். அவர்களை வைத்து இந்திய அணி அடுத்த துவக்க ஜோடியை இந்திய அணி சோதனை செய்ய உள்ளது. இந்த தொடரில் ராகுல் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளதாக ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

ragul

ரஹானே பல தொடர்களாக ஒருநாள் போட்டியில் இடம்பிடிக்காமல் தவித்து வந்தார். ஒருவேளை ஆஸ்திரேலிய தொடரில் அவர் இடம் பிடித்தால் அவரது திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அது அமையும்.

இதையும் படிக்கலாமே :

உங்களது யூனிபார்ம்மை எப்படி அயர்ன் செய்வீர்கள் சாஹல் என்று கலாய்த்த ரோஹித் – அதற்கு சாஹலின் பதில் என்ன தெரியுமா

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்