உங்களது யூனிபார்ம்மை எப்படி அயர்ன் செய்வீர்கள் சாஹல் என்று கலாய்த்த ரோஹித் – அதற்கு சாஹலின் பதில் என்ன தெரியுமா

chahal

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான சாஹல் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். ஒவ்வொரு போட்டி முடிந்ததும் இந்திய அணியின் வீரர்களை பேட்டி எடுப்பது வழக்கம். அந்த வீடியோ நிறைய இணைய தளத்தில் வளம் வந்து கொண்டிருக்கிறது.

chahal

தற்போது சாஹல் ஒரு புகைப்பட பதிவினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ரோஹித் சர்மா கமெண்ட் பகுதியில் சாஹல் உங்களது உடையை எவ்வாறு அயர்ன் செய்கிறீர்கள் என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த சாஹல் ரோஹித் அண்ணா நீங்கள் காமெடி செய்ய நினைத்து இருக்கிறீர்கள். ஆனால், இது காமெடி அல்ல. அடுத்தமுறை நன்றாக முயற்சி செய்து காமெடி பண்ணுங்கள் அண்ணா என்று கிண்டலாக அவருக்கு பதிலளித்துள்ளார்.

yuzi

இந்த பதிவு இணையதள வாசிகள் இடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சாஹலின் ஒல்லியான தோற்றத்தை வைத்து அவரை இந்திய அணி வீரர்கள் கிண்டல் செய்வது வழக்கமாக உள்ளது.

இதையும் படிக்கலாமே :

வெலிங்டனில் டி20 போட்டிக்காக தீவிர பேட்டிங் பயிற்சி எடுத்து வரும் ரிஷப் பண்ட் – வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்