ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் இருந்து ரோஹித், புவனேஷ்வர குமார் அவுட். அவர்களுக்கு பதிலாக இவர்கள் ஆடுகின்றனர் – இந்திய அணி அறிவிப்பு

Team

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளது. அடுத்ததாக வரும் 24 ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்க படவுள்ளது.

rahul

அப்படி அறிவிக்கப்படவுள்ள அணியில் டி20 தொடரிலிருந்து துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு கொடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ச்சியாக போட்டிகளில் ஆடிவரும் ரோஹித் உலககோப்பைக்கு மனதளவில் தயாராகவே இந்த ஓய்வு அவருக்கு கொடுக்கப்பட உள்ளதாகவும் அவருக்கு பதிலாக ராகுல் களமிறங்குவார் என்றும் அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்க பட்டுள்ளது.

மேலும், புவனேஷ்வர் குமாரும் ஓய்வு கொடுக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஓய்வில் இருந்த பும்ரா மீண்டும் அணிக்கு திரும்புகிறார். இவரின் வருகை நிச்சயம் அணிக்கு பலம் சேர்க்கும். மேலும், நியூசிலாந்து தொடரின் நடுவே சில போட்டிகளுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த கேப்டன் விராட் கோலியும் மீண்டும் அணிக்கு திரும்புகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

bumrah

இந்த ஆஸ்திரேலிய தொடரை இந்திய அணி எவ்வாறு சமாளிக்கிறது என்பதனை பொறுத்து உலகக்கோப்பை தொடர் அமையும் என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே இந்த தொடருக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது என்றே கூறவேண்டும்.

இதையும் படிக்கலாமே :

நான் டீவியில் கிரிக்கெட் போட்டிகளை பார்த்ததற்கு முதல் முக்கிய காரணம் இதுதான். அதுவே என்னை கவர்ந்தது – மனம் திறந்த பும்ரா

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்