நான் டீவியில் கிரிக்கெட் போட்டிகளை பார்த்ததற்கு முதல் முக்கிய காரணம் இதுதான். அதுவே என்னை கவர்ந்தது – மனம் திறந்த பும்ரா

Bumrah

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராகவும், உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளர் என்ற சிறப்பினை பெற்றவருமான இளம் வீரர் பும்ரா தனது ஆரம்ப கால கிரிக்கெட் வாழ்க்கை குறித்து இப்போது நினைவு கூர்ந்துளார். அதில் ஆச்சரியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

bumrah

அதில் பும்ரா கூறியதாவது : நான் சிறுவயது முதலே கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டு முறைப்படி கடுமையாக பயிற்சி செய்து படிப்படியாக முன்னேறி தற்போது இந்திய தேசிய அணிக்காக விளையாடி வருகிறேன். நான் இந்திய அணியில் இடம்பிடித்த நாள் முதல் இன்றுவரை இந்திய அணியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்து வருகிறேன்.

இந்திய அணியின் வெற்றிக்கு எனது பந்துவீச்சு ஒரு காரணமாக இருப்பது எனக்கு ஒப்பற்ற மகிழ்ச்சி. எனது ஆரம்ப காலகட்டத்தில் நான் கிரிக்கெட் போட்டிகளை ரசித்து பார்ப்பேன். பேட்ஸ்மேன் சிக்ஸர்கள் அடிப்பது சதம் அடிப்பது போன்றவற்றை நான் விரும்பி பார்ப்பதை விட ஒரு வேகப்பந்து வீச்சாளர் வீசும் வேகம் மற்றும் அவர் எடுக்கும் விக்கெட்டுகளை ரசித்து பார்ப்பேன்.

Jasprit

அதன் காரணமாகவே நான் கிரிக்கெட் விளையாட்டில் வேகப்பந்து வீச்சாளராக முடிவு எடுத்தேன். அதற்காக கடுமையாக உழைத்தேன். குறிப்பாக, யார்க்கர் பந்து வீசுவதில் அதிக கவனம் செலுத்தினேன். இப்போது அந்த யார்க்கர் பந்துகள் என்னுடைய அடையாளமாக மாறியது மகிழ்ச்சி என்று பேட்டியளித்தார் பும்ரா.

இதையும் படிக்கலாமே :

அவனா நீ. ஏன் குறுகுறுன்னு பாக்குற. நான் ரூட்டை ஓரினசேர்கையாளர் என திட்ட முழுக்காரணம் இதுதான் – கேபிரியல் ஓபன் டாக்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்