இந்திய வீரர்களில் அதிக சிக்ஸர்களை அடித்தவர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த தோனியை பின்னுக்கு தள்ளிய இந்திய வீரர் – சூப்பர் ரெகார்டு

dhoni
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி இன்று பே ஓவல் மைதானத்தில் துவங்கியது. நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்து களமிறங்கியது நியூசிலாந்து அணி அதன்படி துவக்க வீரர்களாக குப்தில் மற்றும் முன்ரோ ஆகியோர் களமிறங்கினர்.

toss

நியூசிலாந்து அணியின் அனைவரும் விரைவாக விக்கெட்டுகளை இழந்து வெளியேறிய வண்ணம் இருந்தனர். டெய்லர் மற்றும் லேதம் ஜோடி மட்டும் அந்த அணிக்கு ஆறுதல் தரும் விதமாக அந்த அணியை ஓரளவிற்கு நல்ல ஸ்கோர் குவிக்க உதவினர். டெய்லர் 93 ரன்களும், லேதம் 51 ரன்களை அடித்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி 243ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.

- Advertisement -

பின்னர் 244 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை எதிர்த்து இந்திய அணி விளையாடத் தொடங்கியது. தற்போதுவரை இந்திய அணி 132 ரன்களை அடித்துள்ளது இன்னும் இந்திய அணியின் வெற்றிக்கு 112 ரன்கள் தேவை. ரோஹித் 59 ரன்கள் அடித்துள்ளார் இதில் 2 சிக்ஸர்கள் அடங்கும் . இதன்மூலம் ஒருநாள் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரரான தோனியின் 215 சிக்ஸர்கள் சாதனையை ரோஹித் முறியடித்துள்ளார்.

rohith

ரோஹித் இதுவரை 215 சிக்க்ஸர்கள் அடித்துள்ளார். தோனியும் 215 சிக்ஸர்கள் அடித்துள்ளார் இருப்பினும் தோனியை காட்டிலும் குறைவான போட்டிகளில் ரோஹித் 215 சிக்ஸர்கள் அடித்துள்ளததால் பட்டியலில் தோனியை பின்னுக்கு தள்ளி ரோஹித் முதலிடம் பிடித்தார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

இருவர் இணைந்து ஜோடியாக நூறு விக்கெட்டுகளை இவ்வளவு விரைவாக வீழ்த்துவது அரிதானது – பி.சி.சி.ஐ வாழ்த்து

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -